கொலை முயற்சி வழக்கு நான்கு சிறுவர்கள் கைது
புதுடில்லி : டில்லியில் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக, நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு டில்லி மோதி நகர் பகுதியில், 22 வயதான டேனிஷ் என்பவரை, கடந்த, 9ம் தேதி சிலர் கத்தியால் குத்தினர். இதில், அவரின் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, டேனிஷின் புகாரில், போலீசார் விசாரணை நடத்தினர். குறிப்பிட்ட பகுதியின் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதனடிப்படையில், தேடுதல் வேட்டை நடத்தியதில், 20 வயதான ஒரு கூரியர் பாய், 18 வயதான மாணவன் மற்றும் நான்கு சிறுவர்களை கைது செய்தனர். கைதான நான்கு சிறுவர்களில், 15 வயதான ஒரு சிறுவன் தான், டேனிஷை கத்தியால் குத்தியுள்ளான்.
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என, சம்பவத்தை நேரில் பார்த்த சிலரும் தெரிவித்துள்ளனர். டேனிஷை கத்தியால் குத்தியது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்
-
திமுக அரசின் அடுத்த ஊழல்; நெடுஞ்சாலை துறைக்கு அவசர நிதி ஒதுக்கீடு; நயினார் சந்தேகம்