* ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் திட்டம் என்னாச்சு பயிற்சி கூட்டம் நடத்த இடம் தேடும் அவல நிலை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் கட்டுவதற்கு திட்டமிட்டும் இடம் கிடைக்காமல் மூன்றாண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தனியாக கூட்ட அரங்கம் இல்லாததால் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி, ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு இடம் தேடி கல்வித் துறை அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் தவிர்த்து பிற மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட அலுவலங்கள் ஒருங்கிணைந்த தனி கட்டடத்தில் செயல்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகம் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெருக்கடியில் செயல்படுகிறது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் ஓம்சக்தி நகரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடத்தில் உள்ளது.
கல்வி மாவட்ட அலுவலகங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளது. பள்ளி, ஆசிரியர் பணி தொடர்பான சான்றுகள் தொலைந்து விட்டால் முதன்மை கல்வி அலுவலகத்தை நாடி வருகின்றனர். ஆசியர்களுக்குரிய பணியிடை பயிற்சி அளிக்கவும் இடமில்லை. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை நாட வேண்டிய நிலை உள்ளது.
எனவே முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், தேர்வுத்துறை அலுவலகம், உடற்கல்வி இயக்குநர் அலுவலகம், வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தனியாக பள்ளி கல்வித்துறைக்கு கட்டடம் கட்டித்தர அரசு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக கலெக்டரிடம் முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் இடம்கேட்டு 3 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை தனியாக இடம் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக ஒருங்கிணைந்த கல்வி அலுவலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் விடப்பட்டுள்ளது. எனவே வரும் 2026-27ம் கல்வி ஆண்டிலாவது ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.--
மேலும்
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
-
மதுரையில் பிரதமர் மோடி: ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்
-
கமேனியை கொன்றது எப்படி: அமெரிக்கா, இஸ்ரேல் தீட்டிய ரகசிய திட்டம்
-
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
-
போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு
-
கராச்சியில் அமெரிக்க துாதரகம் சூறையாடல்; துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி