கராச்சியில் அமெரிக்க துாதரகம் சூறையாடல்; துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி
நமது நிருபர்
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சூறையாடினர். அப்போது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது போராட்டக்காரர்களை அமெரிக்க ராணுவத்தினர் கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
ஐநா அலுவலகம் தீக்கிரை
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியான ஸ்கர்துவில் செயல்படும் ஐநா அலுவலகம், ராணுவப்பள்ளி, எஸ்.பி., அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஈரானில் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
ஈராக்கிலும் தாக்குதல்
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்திலும் அமெரிக்க துாதரகம் தாக்கப்பட்டது. நுாற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அமெரிக்க துாதரகத்தை அடித்து நொறுக்கினர். தாக்குதலை முன்கூட்டியே எதிர்பார்த்து அங்கிருந்த ஊழியர்கள், தப்பி வெளியேறினர்.
சென்னையில் முற்றுகை
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பாக்கிஸ்தான் ஒரு விஷ பாம்பு. நண்பனாக நடிப்பான். ஆனால் காலம் வரும் போது கடிப்பான். இதை பாக்கிஸ்தான் ராணுவ ஜனாதிபதி முஷாரப் ஒரு பேட்டியில் பெருமை பீத்தி கொண்டது. ட்ரம்பின் மூளையில் இது ஏறாது.
தமிழ் நாட்டில் எதுக்கு போராட்டம், இந்த போக்கு சரி இல்லை, மத தீவிர வாதம் உலக அழிவுக்கு வழி வகுக்கும். தமிழ் நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் எதிர் காலத்தை பற்றி சிந்திப்பது இல்லை.
உலகின் எந்தப்பகுதியில் பிரச்சினை வந்தாலும் இங்கு வம்பு செய்வது அரசியல் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மதவெறியை விட அதை ஊக்குவிக்கும் அரசியல் கட்சிகள் கேவலமானவை
கருணாசுக்கும் கமெனிக்கும் என்ன கூட்டணி
காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார் இந்த கோமேனி, இவருக்கு ஆதரவாக தமிழகத்தில் கோசமிட அனுமதி கொடுத்தது எப்படி.
தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய ஆட்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள்.... அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது..
பங்களாதேஷ் கலவரத்தில் இந்துக்கள் கொல்லபட்டத்தை பற்றி இந்த..... ளுக்கு தெரியல கொமேனி செத்ததுக்கு போராட்டம் இவனுக்கும் கொமேனிக்கும் என்ன உறவு.... மானங்கெட்ட இந்துக்கள் இருக்கும் வரை இவனுங்க இப்படி தான் இருப்பார்கள்....
இவனுக யாரு???மேலும்
-
முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்
-
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
-
ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்
-
துபாய் விமான நிலையத்தில் நேரிட்ட துயரம்; வருத்தத்தை பகிர்ந்த வீராங்கனை பி.வி.சிந்து
-
ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்