ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் நடைமேடை பொருத்தும் பணி துவக்கம்
ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் வருவாய் வரவேற்பு, பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள சிறிய ரயில்வே ஸ்டேஷன்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மதுரை மண்டலத்தில் உள்ள 15 ரயில் நிலையங்களில் ராஜபாளையம் ஒன்று. இதன்படி ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் வசதி, மாற்று திறனாளிகளுக்கான வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், 5 ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல், புதிய மேம்பட்ட வடிவமைப்பு உள்ளிட்ட வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் ஏற்கனவே வடக்கு பகுதியில் புதிய நடை மேம்பாலத்தின் இரும்பு சட்டங்கள் பிரத்தியேகமான கிரேன் மூலம் தூக்கி வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
புதிய நடைமேடை மூன்று பிளாட்பாரங்களை இணைக்கும் வகையிலும் 20 அடி அகலத்தில் அமைய உள்ளது. ஏற்கனவே வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுழைவு வாயில் மூலம் வரும் பயணிகள் உள்ளிட்டோர் ஸ்டேஷன் மறுபகுதியை சுலபமாக கடக்க முடியும் என பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
-
மதுரையில் பிரதமர் மோடி: ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்
-
கமேனியை கொன்றது எப்படி: அமெரிக்கா, இஸ்ரேல் தீட்டிய ரகசிய திட்டம்
-
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
-
போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு
-
கராச்சியில் அமெரிக்க துாதரகம் சூறையாடல்; துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி