ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை: டிரம்ப் கருத்தில் மாறுபடும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர்
வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவந்த நிலையில், அந்நாடு அணுகுண்டு தயாரித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அந்த முகமையின் இயக்குநர் ஜெனரல் ரபேல் குரோஸி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து எனது அறிக்கையில் நான் தெளிவாக உள்ளேன். ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அதற்கு தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகளவு வைத்து இருந்தது. அணுசக்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்கு போதுமான ஒத்துழைப்பை ஈரான் வழங்கவில்லை. இது கவலையளிக்கும் விஷயம். பிரச்னைகளை தீர்க்க பன்னாட்டு அணுசக்தி முகமைக்கு அந்நாடு உதவாத வரை ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதிக்கானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரான் மீது தாக்குதலை துவக்கிய பிறகு அதிபர் டிரம்ப் கூறுகையில்,' இந்த தாக்குதலை அமெரிக்கா துவக்கி இருக்காவிட்டால், ஈரான் அணு ஆயுதப்போரை துவக்கியிருக்கும். பல நாடுகளை தாக்கியிருக்கும். அவர்கள் மனரீதியில் சரியில்லாதவர்கள். கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் அதனை பயன்படுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ கூறுகையில், ஈரானை மத அடிப்படைவாதிகள் வழிநடத்துகின்றனர். அணு ஆயுதம் தான் அவர்களின் நோக்கம். ஏவுகணை மற்றும் டிரோன் எனக்கூறிக்கொண்டு அணு ஆயுதங்களை தயாரிக்கின்றனர். மத அடிப்படைவாதிகள் கைகளில் அணுஆயுதம் கிடைக்காத வரை உலகம் அமைதியாக இருக்கும் எனத் தெரிவித்து இருந்தார்.
ஆனால், இதற்கு நேர்மாறாக சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல், ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
பயங்கர வாதம், மதவாதத்தில் சிக்கும் நாட்டில் அணு ஆயுதம் கூடாது. பாகிஸ்தான் நாட்டிடம் கூடாது. அணு சக்தி முகமை இயக்குநர் ஈரான் தயாரிக்கவில்லை என்றாலும் ஒரு சிறிய அணுகுண்டை அவர்கள் வசம் ஒப்படைத்து அமைதி, அகிம்சைக்கு எப்படி பயன் படுகிறது என்று பரிசோதிக்க முயற்சிக்கலாம்.
ஒரு நாடு பல ஆண்டுகளாக அணு ஆயுதங்களை தயாரித்து வைத்துக்கொண்டு இந்தியாவை அணுகுண்டு போடுவேன் என்று மிரட்டி வருகிறது. அந்த நாடும், அதன் மத தீவிரவாதமும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லையா கோமாளிகளே?
அமெரிக்க மூடர் கூட்டங்களே பயங்கரவாத பாக்கிஸ்தான் கையில் அணு ஆயுதம் உள்ளதே அவர்களுக்கு ஏன் சோறு போட்டு வளர்ககிருறீர்கள் .திராவிடம் போல் உங்கள் முட்டாள்தனத்தை அடுத்தவர்கள்மேல் திணிக்காதீர்கள்.
வடிவேல் காமெடியில் "ஆடு திருட்டு போக வில்லை திருட்டு போன மாதிரி கனவு கண்டேன்" என்பது மாதிரி, அமெரிக்கா பின்னர் பதில் சொல்லலாம். அமெரிக்கா தங்களிடம் அணுகுண்டு வைத்துக் கொண்டே, யோக்கியன் மாதிரி ஈரானை கட்டுப் படுத்த நினைப்பது தவறு. அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்று ஆசைப்படும் இந்த தாத்தாவின் செயல்பாடுகள் அமைதியை விரும்புவது போல் தெரியவில்லை. விட்டால் இந்த தாத்தா, தாதா ஆக மாறி நார்வே நோபல் பரிசு குழுவையே அடித்து, மிரட்டி பரிசை பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. ஈரான் கையில் அணுகுண்டு இருந்தால், குரங்கு கையில் இருக்கும் பூ மாலை போல தான். அதற்கு ஒரு கட்டுப்பாடு அவசியம். ஆனால், அமெரிக்கா செய்கை எல்லோரையும் அடித்து விளையாட நினைக்கிறது. அது தவறு என்பது அடியேனது கருத்து.
இவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தான் அவர்கள் அணுகுண்டு செய்வார்களா என்ன?
நமது தேசத்தின் வளர்ச்சியை பார்த்து நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து இரவு பகலாக உழைக்கும் ஒரு மாமனிதனை அவதூறு கூறுவது அடுக்காது. பாவத்தை சுமக்க நேரிடும்
அமெரிக்காவிடம் அணுகுண்டு இல்லையா????
மனிதர்களிடம் அணுகுண்டு இருப்பதற்கும் மூர்க்க கும்பலிடம் அணுகுண்டு இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் விளிம்பில் உள்ளது. மத வாதிகள் பிடியில் உள்ள நாடு.. எதிரி இசுலாமிய நாடக இருந்தாலும் அணு ஆயுதம் பயன்படுத்த தயங்க மாட்டார்கள். அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியாவிற்கு பெரும் ஆபத்து விளையும். அணுசக்தி இயக்குநர் ஜப்பான் நாட்டில் அணுகுண்டு வீசியது போல் வீசிய பின் ஆதாரம் உண்டு என்பார். சரிங்க.
விடியல் டி.என்.ஏ. தான் ஏமாற்றல் மட்டும் பொய் பேசும். புரட்சித் தலைவர் பாடியது போல திமுக விடியல் தான் ""பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பெருமான்
ஒருத்தரை நோக்கி நீ ஒரு விரல் நீட்டினால் மற்ற நான்கு விரல்களும் உன்னை சுட்டிக் காண்பிக்கும். நல்ல உ.பீஸ். ங்கப்பா கொடுக்கற காசுக்கு மேலேயே கூவுறீங்க
உண்மை விளம்பியாமேலும்
-
துபாயில் இருந்து இன்று 45 விமானங்கள் இயக்கம்: உறுதி செய்தது எமிரேட்ஸ் நிறுவனம்
-
'இதயம்' குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்
-
மாதம்பட்டி ரங்கராஜூக்கு மரபணு பரிசோதனை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து படிக்கும் விஜய்; அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
-
தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைவது எப்போது? மத்திய அரசுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி
-
முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் நிதிஷ் குமார்? பீஹார் அரசியலில் பரபரப்பு