முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் நிதிஷ் குமார்? பீஹார் அரசியலில் பரபரப்பு
புதுடில்லி: பீஹார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஹார் முதல்வரான நிதிஷ் குமார் 75 வயது ஆகிறது. வயது மூப்பு பிரச்னைகளில் அவதிப்பட்டு வருகிறார். இதனால், மகன் நிஷாந்த்தை அரசியலுக்குள் கொண்டு வந்து கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க திட்டமிட்டு வருகிறார். தனக்கு பின் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை மகனிடம் ஒப்படைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதில் ஒன்றில் ராம்நாத் தாக்கூர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மற்றொரு இடத்துக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்யசபாவுக்கு போட்டியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வேட்புமனு தயாராகிவிட்டதாகவும், நிதிஷ் குமார் கையெழுத்து போட வேண்டியது தான் பாக்கி எனவும் தெரிகிறது.
இதனிடையே ஐஜதவின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, நிதிஷ்குமாருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், நிதிஷ்குமார் பதவி விலகல் குறித்த யூகங்கள் கிளம்பி உள்ளன. அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் லாலன் சிங் நாளை டில்லியில் இருந்து பாட்னாவுக்கு வர உள்ளார். இதுவும் நிதிஷ்குமாரின் பதவி விலகலுக்கான விவாதத்தை அங்கு கிளப்பி உள்ளது.
பாஜ முதல்வர்?
இதனிடையே, பீஹார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகினால், அடுத்ததாக பாஜவை சேர்ந்தவர் முதல்வராக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது. நிதிஷ்குமார் மகன் நிஷாந்த்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநில சட்ட மன்ற தேர்தல் கடந்த 2025 நவம்பரில் நடந்த போது நிதிஷ் குமாருக்கு வெறும் 20 வயது தான் பின்னர் ரெண்டு மாதங்கள் கழித்து வயது மூப்பு 75 என்ற கதை எல்லாம் ரிலீஸ் ஆகிறது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு இப்போது 72 வயது
வாரிசு வரலாம். ஆனால் நல்லவனாக, நாட்டுக்கு உழைப்பவனாக இருத்தல் வேண்டும். இரு திராவிட கட்சிகள் போல வெறுமனே கொள்ளையடிப்பதே பணியாக கொள்ளக்கூடாது
மிக மிக சரியாக கூறினீர்கள்.
வேட்டிக்குள் விட்ட ஓணான் எத்தனை காலம் தான் சும்மா இருக்கும்?
பீகார் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் பதவி விலகி, மகனை முதல்வர் அல்லது துணைமுதல்வர் பொறுப்பில் அமர்த்துகிறார் என்ற தகவல் பாஜகவின் வாரிசு அரசியல் என்பது திமுக, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே பேசும்.
சிறிது காலமாக பொது மேடைகளில் இவரது சேட்டைகள் மிகுந்த விமரிசனத்துக்கு உள்ளானது. பதவியை துறக்க வேண்டிய தருணம். 80 வஎதுக்கு மேலும் கூட மொரார்ஜி போன்றோர் மேடை மிடுக்குடனும் ஸ்டெடியாகவும் இருந்திருக்கிறார்கள். ஜிம்மி கார்ட்டர் தன்னை பற்றி மேடையில் நைசாக முணுமுணுத்ததை கண்டு பிடித்து தகுந்த பதிலும் குடுத்தார். இவுரு என்னாடான்னா ....
நிதிஷின் நல்ல முடிவு. பீகார் பிஜேபி முதல்வரை பெறுகிறது. இனி வளர்ச்சி தான்.
அப்படி இப்படி எப்படி பார்த்தாலும் இறுதிவரை பதவி சுகம் அனுபவிக்கனும். வாரிசுக்கும் importance வேணும்.
பிஜேபி சட்டசபை பெரும்பான்மை எனவே முதல்வர் பதவியை பிடிக்கிறது. வயது ஆனதால் இவர் ராஜ்ய சபா செல்கிறார். இவரது மகன் துணை முதல்வர் பதவி கொடுப்பார்கள்.
பதவி விலகுவதே மகனை உட்கார வைக்க.திராவிட மாடல் ....
As per media reports, Nitish Kumar may go to Rajya Sabha, join the Modi cabinet and the BJP may have its own CM in Bihar, with Nitishs son as Dy CM. Not confirmed yet, but the rumour is going around.மேலும்
-
இஸ்ரேலுக்கு ரூ.1,388 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
-
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விலக்கு அளித்த விவகாரம்; மத்திய அரசுக்கு சசி தரூர் ஆதரவு
-
மேல்தளத்தின் உட்புறத்தில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தால் என்ன செய்வது?
-
கட்டுமான பணியில் மேல்தளத்துக்கான செலவை கணக்கிடுவது எப்படி?
-
மனையின் அங்கீகார நிலையை ஆராயாமல் வீடு வாங்காதீர்!
-
புதிய வீடு கட்டும் போது கழிவுநீர் வடிகால் அமைப்பதில் கவனமாக இருக்கணும்!