ஈரானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்படுகிறோம்; தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்படுகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானுடனான மோதலில் அமெரிக்கா மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் ஈரானின் ராணுவ திறன்களை பலவீனப்படுத்தியது. நாங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படப் போகிறோம். இதுவரை உலகின் மிகப் பெரிய ராணுவம் எங்களிடம் உள்ளது. ஈரான் பல ஆண்டுகளாக எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது.
47 ஆண்டுகளாக அவர்கள் எங்கள் மக்களைக் கொன்று வருகிறார்கள். உலகம் முழுவதும் மக்களைக் கொன்று வருகிறார்கள், எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. ஈரானின் ஏவுகணைகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் இப்போது மிகவும் வலுவான நிலையில் இருக்கிறோம். அவர்களின் தலைமை வேகமாக முன்னேறி வருகிறது. தலைவராக வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் அண்டை நாடுகளைத் தாக்குகிறார்கள்.
முதல் பதவிக்காலத்தில் நாங்கள் எங்கள் ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். வெனிசுலாவில் எங்கள் ராணுவம் சிறப்பாக செயல்பட்டது. தற்போது வெனிசுலா அதிபர் மற்றும் பல்வேறு பிரதிநிதிகளுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு உள்ளது. நாங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்கிறோம். அது எங்களுக்கும் வெனிசுலாவிற்கும் நன்மை தரும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
தற் பெருமையின் உச்சமாக தமிழ்நாடு அரசு இருக்கிறது எனில், உலக அளவில் டிரம்ப் கூட அது போன்றுதான் இருக்கிறார்.
அப்பாவி மக்கள் படும் துன்பங்கள் துயரங்கள் பற்றி கவலை படாத மூர்க்க குணம் கொண்டவர்களின் தலைவன் இந்த நபர்
தமிழகத்தில் ஒரு தற்பெருமை தனராஜ் ஸ்டாலின் என்றால், அமெரிக்காவின் தற்பெருமை தனராஜ் இந்த டிரம்ப். இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் அவர்களைப்பற்றியே எப்பொழுதும் பெருமையாக பேசித்திரிவார்கள்.
நமது பிரதமர் மோடி அவர்களுடன் நட்பான பிறகு தான் இப்படி ஆகி விட்டார்!
இரண்டாம் முறை பதவிக்கு வந்து ஒரு வருடமாக சுய தம்பட்டம் அடித்தே காலத்தை ஓட்டி விட்டார் டிரம்ப். நம்ம ஊரு ஆளு ஞாபகம் வருது. புரிஞ்சவங்க பிஸ்தா. ஹி ஹி
எப்படியிருந்தாலும், இப்போது கமேனியும் அவரது பல உயர் தளபதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள். இதுவரை ஈரானில் எந்த அணு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இனிமேலாவது அமெரிக்கா இந்தப் போரை நிறுத்த வேண்டாமா? ஏனென்றால் இப்போது பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் அவர்களில் பெரும்பாலோர் கமேனிக்கு எதிரானவர்கள். எனவே டிரம்பின் பிடிவாதம் சரியல்ல.
மாடல் ஆட்சியை பற்றி விடியல் தனக்கு தானே பீற்றிக்கொள்வதில்லையா? அதுபோல தான் ...
Reports suggest more than 400 IRGC members killed in overnight bombing by U.S.
அதாவது கவுண்டமணியின் கோயில் காளை பட காமெடி மாதிரி பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே என்பதைப் போல இனி போர் முடிவுக்கு வரும் வரை ஆசிய நாடுகள் கச்சா எண்ணெய் தேவைக்கு ஒபெக் நாடுகளையோ வெணிசுலாவையோ அமெரிக்காவையோ நாட வழியில்லை ஏனென்றால் ஈரான் ஜலசந்தி பாதையில் வரும் கப்பல்களை தாக்குதல் நடத்துவான் பல ஆயிரம் கிமீ சுற்றிக் கொண்டு வந்தால் அது விலையேற்றத்தை சந்திக்கும் எனவே இனி இந்தியா உட்பட எல்லா ஆசிய நாடுகளும் அருகிலுள்ள ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்காக மாற்று வழியை தேடுவார்கள் ஆக இந்த போரால் பயனடைய போவது ரஷ்யாதான்
இந்தாள் பெயரை, அடுத்தவன் சொத்தை ஆட்டைய போடறவன், அயோக்கியன், யுத்த பைத்தியம், என மாற்றிவிடலாம்.
அவன் ஒரு இழிபிறவி.மேலும்
-
அமெரிக்காவுக்கு எதிரான போர்; ஈரானுக்கு ரகசிய தகவல்களை வழங்கியது ரஷ்யா
-
சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? குலதெய்வம், பரிகார கோவிலை நாடும் அரசியல்வாதிகள்
-
பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
5 நாட்களாக சரிந்த நிலையில் இன்று உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு
-
அமெரிக்கா உடனான போர் விவகாரத்தில் மவுனம்; ஐநா மீது ஈரான் அதிருப்தி
-
காசி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா