காசி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காசி சனீஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.
சனீஸ்வர பகவான் கோவிலில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். அதன்படி நேற்று காலை, 8:24 மணிக்கு சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குரு பகவானின் வீடான மீனம் ராசிக்கு சென்றார். இதையொட்டி, கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்ச நேயர் கோவில் அருகில் அமைந்துள்ள, காசி சனீஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.
சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து சிறப்பு யாகம் வளர்த்து பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* ஊத்தங்கரை, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனி பெயர்ச்சி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் குப்தா தலைமையில் நிர்வாகிகள் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி