பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், 'தமிழகத்தைப் பாருங்கள்' என்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: வரும் மார்ச் 9ம் தேதி திமுகவினரின் திருமுகம் கண்டு நான் மகிழும் வாய்ப்பு அமையவிருக்கின்ற இதே திருச்சி சிறுகனூரில்தான் 5 ஆண்டுகளுக்கு முன் 2021 மார்ச் 7ம் நாள் உங்களின் திருமுகம் கண்டேன். திமுக அரசு 4 ஆண்டுகளிலேயே, இந்தியாவிலேயே 11.19% என்கிற இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யாமல் வஞ்சிக்கின்ற மத்திய அரசினாலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தின் சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் மேலும் வளர்ச்சியடைய இன்னும் 5 ஆண்டுகாலம் திமுக ஆட்சி தொடர வேண்டும். திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், 'தமிழகத்தைப் பாருங்கள்' என்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியிருக்கிறது.
@quote@அடுத்த 5 ஆண்டுகாலம் தொடரப்போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதுடன், சர்வதேசத் தரத்துடன் உலக நாடுகளுடன் போட்டி போடக்கூடிய அளவுக்கான வளர்ச்சியை நிச்சயம் பெற்றிருக்கும். quoteகட்சியினரின் ஒருவன் என்ற உணர்வுடன் திமுகவிற்காக உழைக்கிறேன். நான் கூடுதலாக உழைக்க வேண்டும் என அன்றாடம் பணியாற்றுகிறேன்.
என்னைப் போலவே உழைக்கும் பேராற்றல் பெற்றவர்கள்தான் கட்சியினராகிய நீங்கள். உங்களைக் காணும்போது என் உழைப்பின் ஆற்றல் மேலும் பெருகும். எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வரலாற்று வெற்றியைப் படைக்க வருக உடன்பிறப்பே.. திருச்சி குலுங்கட்டும்… தி.மு.க வெல்லட்டும்.. சிறுகனூர் மாநாடு வரலாறு படைக்கட்டும். இவவாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
dmk shows ways to other states as to how to give freebies, how to run tasmac and make people to addict for ganja etc., and in what all ways public funds can be used for installing father statues, in what all ways public fund can be transferred to family welfare
Stalin ji , stop this nonsense . Just look at neighbours like Andhra how it is progressing from scratch . You live on past glory and sticker business
எல்லா மாநிலங்களையும் கெடுத்து குட்டி சுவராக்கிய பெருமை நிச்சயம் உனக்குத்தான் , உழைப்பவர்களை உன்னுடைய சுய அரசியல் லாபத்திற்க்காக இலவசம் மற்றும் சாக்கடை சாராயத்தை மக்களுக்கு பழக்கப்படுத்தி அதையே தினமும் பேசி தம்பட்டம் அடிக்கின்றாயே உனக்கு வெட்கமாக இல்லையா , தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி % இல் நீ கொடுக்கும் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது , யாரை ஏமாற்றி வேஷம் போடுகிறாய்
எப்படி - எப்படி - கொஞ்சம் விலாவாரியா சொல்லுதம்பி - சிரிச்சு விலா எலும்பு நோகுது
GDP என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய் , நன்கு படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள் , பின்பு விலா எலும்பு மேலும் நோகும்படி சிரி , என் உடன்பிறப்பே
தினம் ஒரு தொல்லை. தாங்க முடியல. சீக்கிரம் தேர்தல் வைத்து தொலைத்தால் என்ன?
டூரிஸ்டு கைடா? இந்த ஊரில் தங்க எந்த நல்ல ஹோட்டல் எது.
பிற மாநிலங்களுக்கு நல்வழி காட்டும் திமுகவா? தீயவழி காட்டும் திமுகவா? காலை மாலை அறிக்கை தினமும் வந்து கொண்டு இருக்கு. தோல்வி பயம் உச்சத்தில் உள்ளது..
எதுக்கையா 6 லட்சம் கோடி கடன் வாங்கினீர்கள் அதில் இந்தியாவில் சிறந்த கடன் வாங்கிய மாநிலமாக முன்னணியில் இருக்கிறது. அரிசி என்ன விலை இருக்கிறது தெரியுமா. எடப்பாடி ஆட்சியை விட்டுப் போகும்போது ஒரு கிலோ அரிசி 40 ரூபாய். இப்போது ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. ஒரு இட்லி விலை 15 ரூபாய் ஒரு தோசை விலை 70 ரூபாய். சும்மா ஜி டி பி பி டி பி என்று அள்ளி கொட்ட வேண்டாம்
இந்தியாவின் GDP 6.2 % ஆனால் TN GDP 11.9 % இப்ப சொல்லுங்கள் ஸ்டாலின் பெருமிதம் கொள்ளுவதில் தவறு ஏது
ARAI VEKKADU AARUYIRTHEVAN IDHA ENGA PADICHA OOH MURASLIYAA.SUPER.MURASOLI THUDAITHA MOOLAYODU SINDHIKKA THERIYAAMA ULARAADHE. MUNNERUM VAZHIYA PAARU.200 ROOVAA AZHUKKALAYAM ADAPPU EDUKKUM KOTHADIMAI VELAI VENDAAM.
ஆகூர் அப்போ எதுக்கு வரிசையில் நின்று மூவாயிரம் வாங்குற
1967 க்கு முன்னரே தமிழ்நாடு முன்னேறிதான் இருந்தது. இன்னும் சொல்லப் போனா மூவேந்தர் ஆண்ட போதே கடல் கடந்து வணிகம் செய்தார்கள். இப்போ மது விற்று, கடன் வாங்கி வீக்கம் ஏற்படுத்தி வீக்கத்தை வளர்ச்சின்னு கதை விடறாங்க.
1967 க்கு முன்னரே தமிழ்நாடு முன்னேறிதான் இருந்தது. இன்னும் சொல்லப் போனா மூவேந்தர் ஆண்ட போதே கடல் கடந்து வணிகம் செய்தார்கள். இப்போ மது விற்று, கடன் வாங்கி வீக்கம் ஏற்படுத்தி வீக்கத்தை வளர்ச்சின்னு கதை விடறாங்க.
அறிவிலி ஆகூர். அப்படியே வாங்குன கடனையும் சொல்லேன்
இவர் ஆள்வதால் தான் GDP உயர்ந்து உள்ளதா?
NCR DATTA படி TN 19 இல் இடத்தில பெண்கள் பாதுகாப்பில் தேக்கம் , உள்ளது அப்போ பிஜேபி ஆளும் மாநிலங்கள் தான் முன்னர் உள்ளனர் இதை தான் தலைவர் சொல்லுகிறார்மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி