குஜராத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் நிலநடுக்கம்
ஆமதாபாத்: குஜராத்தில் ஒரே நாளில் கட்ச், டஹோட், போடட் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது.
குஜராத் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள டஹோட் நகருக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் நேற்று காலை 11:55 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவானதாக காந்தி நகரில் உள்ள நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து பகல் 1:43 மணிக்கு கட்ச் மாவட்டத்தின் பச்சாவை மையமாக வைத்து மிதமான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. 29.5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.4 ஆக பதிவாகியிருந்தது.
இதை தொடர்ந்து நேற்று மதியம் 3:08 மணியளவில் போடட்டின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் 15 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியிருந்தது.
இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
மேலும்
-
அமெரிக்காவுக்கு எதிரான போர்; ஈரானுக்கு ரகசிய தகவல்களை வழங்கியது ரஷ்யா
-
சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? குலதெய்வம், பரிகார கோவிலை நாடும் அரசியல்வாதிகள்
-
பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
5 நாட்களாக சரிந்த நிலையில் இன்று உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு
-
அமெரிக்கா உடனான போர் விவகாரத்தில் மவுனம்; ஐநா மீது ஈரான் அதிருப்தி
-
காசி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா