'ரத்தத்துக்கு ரத்தம்' கமேனி கொலைக்கு பழிவாங்க ஈரான் மதத் தலைவர்கள் உத்தரவு
டெஹ்ரான், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்க உத்தரவிட்டு அந்நாட்டு மதத் தலைவர்கள், 'பத்வா' எனப்படும் மத உத்தரவு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் மேற்காசிய நாடான ஈரானில் 36 ஆண்டுகளாக உச்ச தலைவராக இருந்த மூத்த மதகுரு அயதுல்லா அலி கமேனி, 83, அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார். இதற்கு எதிராக ஈரானில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஈரானின் மிக மூத்த மதகுரு இருவர், கமேனி கொலைக்கு என்ன தண்டனை என்பதை விளக்கி பத்வா எனப்படும் முஸ்லிம் சட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில், 99 வயதான அயதுல்லா நாசர் மகாரெம் ஷிராசி என்ற மதகுரு, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் முதன்மை குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளார்.
'இந்த குற்றவாளிகளின் தீமையை உலகிலிருந்து அழிக்கும் வரை பழிவாங்குவது உலக முஸ்லிம்களின் மதக் கடமை' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'ஜிஹாத்' என்ற வார்த்தையை பயன்படுத்தி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோன்று நுாரி ஹமதானி என்ற மற்றொரு மதகுரு, குவோம் நகரில் உள்ள செமினரி மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் சபையின் கோரிக்கைக்கு பதிலளித்து, 'புரட்சியின் தியாகத் தலைவரின் ரத்தத்தை சிந்தியவர்களின் ரத்தத்தை சிந்த வைப்பது அனைத்து முஸ்லிம்களின் கடமை' என அறிவித்துள்ளார்.
இந்த பத்வாக்கள் வெளியானதும், அமெரிக்க உளவுத்துறை, உலக அளவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. மேலும் ஐரோப்பா, குறிப்பாக ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தொடர்புடைய 'ஸ்லீப்பர் செல்கள்' குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
@block_B@ 'டிவி'யில் ஒளிபரப்பு இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரானில் நடத்தி வரும் கடுமையான வான்வழி தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரான் அரசு 'டிவி'யில் ஒரு மூத்த மதகுருவின் அதிர்ச்சி தரும் செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதில், இஸ்ரேலியர்களும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் ரத்தம் சிந்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பழிவாங்கல் உணர்வை துாண்டும் வகையில் அவருடைய பேச்சு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.block_B
அதேபோல் சங்கீகளும் இந்த உலகத்தை விட்டு ஒழிந்தால் சரி.
நீ போயி.....
நல்லது ...முடிந்தால் டிரம்ப் ஐ தொட்டு பாருங்கள் ... இந்நேரம் உங்க மத தலைகளுக்கு ஸ்கெட்ச் ரெடி ஆயிருக்கும் .... எப்படியோ மூர்கர்கள் இந்த உலகத்தைவிட்டு ஒழிந்தால் சரி ...
இதை தான் வேலியில் போன ஓணானை.. பிடித்து வேட்டிக்குள் விட்ட கதை தான் இவர்களுக்கு ஏற்படும். அவர்கள் சும்மாவே காட்டு காட்டு என்று காட்டுவார்கள். இனி ஈரான் மீது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும்.. ஒரு மதம் எந்தளவுக்கு வேகமாக வளர்கிறதோ அதைவிட வேகமாக அழியும். அது தான் நியதி. இரண்டாம் உலகப் போர் நடந்த போது யூத மதம் அழிவை சந்தித்தது. இப்போது இவர்கள் முறை போல் தெரிகிறது.
தளபதி விஜய் ரத்தத்தின் ரத்தமே என்றார்.
அது உடன்பிறப்பே என்று பொருள், சகோதரத்துவத்தை குறிக்கிறது.
இவர்களோ ரத்தத்திற்கு ரத்தமே என்கிறார்கள். பயமாக இருக்கிறது.
பயங்கரவாதிகள் இடத்தில் நிம்மதி இருக்காது. அனைவரும் கூட்டு பிராத்தனை செய்வோம்.
இவங்களுகுள்ளேயே சண்டை போடுவானுக, இல்லனா, வெளி ஆளோட சண்டை போடுவானுக. சண்டை நிச்சயம், யாரோடங்கிகிறதுல தான் தீர்மானம். எவனும் நிம்மதியா இருக்க விடமாட்டானுக இந்த ஈரான். சவூதி அரபி எமிரேட்ஸ், கத்தார், எல்லோரும் ஈரான் மறைமுகமா எதிர்த்து வேலை செய்வானுக. ஷியா, சுனி சண்டை பெருஞ்சண்டை. இவனுக நம்பள பார்த்து ஜாதி பேசுவனுக.மேலும்
-
பாலக்காடு - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில்; மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி
-
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; கர்நாடகா முதல்வர் சித்தராமையா
-
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும்; ராஜ்நாத்சிங் எச்சரிக்கை
-
இயற்கை விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும்: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
-
எம்எல்ஏ சீட் வாங்கியே தீரணும்; சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் போட்டா போட்டி
-
நேபாளத்தில் ஆட்சியைப் பிடிக்கும் ராப் பாடகர்... யார் இந்த பாலென் ஷா தெரியுமா?