பாலக்காடு - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில்; மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி
சென்னை: பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே மின்சாரப் பயணிகள் ரயில் இயக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி மற்றும் ரயில்வேத்துறை அமைச்சருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்தார்.
அவரது அறிக்கை; சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன்.
அதன்படி,
1) பாலக்காடு- பொள்ளாச்சி MEMU (மின்சாரப் பயணிகள் ரயில்கள்)
2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் ரயில்
3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில்
4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு ரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும்,
1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு ரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
2) தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு ரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும்,
1) திருச்சி- காரைக்குடி பயணிகள் ரயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.
2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு ரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் மோடிக்கும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பிற்குரிய இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு, நீங்கள் மக்களுக்காக ஆட்சி நடத்துகிறீர்களா அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்சி நடந்துகிறீர்களா, சாதாரண மக்கள் பயன் பெறும் படுக்கை ஸ்லீப்பர்வகுப்புகளை ஸ்12 வரை இருந்த ரெயில்களில் அடியோடு 4 முதல் 6 பெட்டிகளை குறைத்து பணம் இருக்கும் மக்கள் போகும் முறையில் குளிரசத்தான பெட்டிகளை அதிக படுத்தி சாதாரண மக்கள் ரயிலில் எற முடியாமல் செய்வது நீங்கள் செய்யும் ஆட்சி கேவலமா இல்லையா. வடநாடுகளில் மட்டும் அனைத்து ரெயில்களிலும் சாதாரண பெட்டிகள் அதிகம், சென்னை, மதுரை, பெங்களூரு, கோவை பக்கம் சாதாரண பெட்டிகளை குறைப்பதே உங்கள் கேவலமான ஆட்சி, தமிழ்நாடு, கேரளா பக்கம் பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாத்தி மக்கள் காசை சுரண்டுவது கேவலமான ஆட்சி இல்லையா, திருநெல்வேலி -மதுரை பாசஞ்சர் ரயில் இல்லை, மதுரை -திருச்சி பாசஞ்சர் ரயில் இல்லை, மதுரை -செங்கோட்டை -புணலூர்
பாசஞ்சர் ரயிலில் இல்லை i
முருகன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்
Can we expect Pollachi to coimbatore Electric train because Pollachi peoples main travel destination is Coimbatore not Palakkad. Palakkad to Pollachi train may be happy news for people from Palakkad .More trains from Coimbatore to Pollachi and back during office hours and fast passenger train during night time to catch trains to Chennai are need of Pollachi people.
It is now known that the Minister Shri L Murugan there is a need for the general public who are travelling between Thanjavur, Tirunelveli to Bengaluru/Mysore for business, employees, tourists et all. Always he is giving importance to Kerala, may be he has forgotten to serve for the TAmilnadu & Karnataka. Karnataka gives the maximum employment besides the lifeline of Cauvery water. Kudos to Minister, keep it up. Railway facilities mean only Kerala and not Karnataka.மேலும்
-
தமிழகம் மேற்குவங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்