நேபாளத்தில் ஆட்சியைப் பிடிக்கும் ராப் பாடகர்... யார் இந்த பாலென் ஷா தெரியுமா?
காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த பொதுத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ராப் பாடகர் பாலென் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
நேபாளத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த இளம் தலைமுறையினரின் போராட்டத்தால், அப்போதைய பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, அங்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்க்கி தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
கடும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில், 275 இடங்களைக் கொண்ட நேபாளத்தில் நேற்று (மார்ச் 5) பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 275 இடங்களில் 165 இடங்களுக்கு நேரடித் தேர்தல் மூலமாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
காத்மாண்டு முன்னாள் மேயரான பாலெனை ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. அதேபோல, ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கே.பி.சர்மா ஒலியே அறிவிக்கப்பட்டார்.
இன்று காலை முதல் நேரடி தேர்தல் நடந்த 165 தொகுதிகளுக்கான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பிரதமர் வேட்பாளர் பாலென் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி 94 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா தலைமையிலான கட்சி வெறும் 6 இடங்களிலும், நேபாள காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன.
இதன்மூலம், மன்னராட்சியை ஆதரிக்கும் பாலென் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
யார் இந்த பாலென் ஷா?
35 வயதான பாலேந்திர ஷா ஒரு கட்டுமான இன்ஜினியர். இவர், ராப் பாடகரும், காத்மாண்டுவின் முன்னாள் மேயரும் ஆவார். இவரை மக்கள் பாலென் என்று அழைத்து வருகின்றனர்.
ராப் பாடகர்களான டுபாக் ஷகூர் மற்றும் 50 சென்ட் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு, ராப் பாடகராக மக்களிடைய பிரபலமானார். அதன் பின்னரே, 2022ல் காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது நேபாளத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார். நேபாள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி மற்றும் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது போன்ற வாக்குறுதிகளின் மூலம் இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார்.
நேபாள அரசு குடும்பம் ஶ்ரீ ராமேஸ்வரம் கோவிலுடன் தொடர்பு கொண்டது. இங்கு நாத்திக திராவிடம் போல் அங்கு கம்யூனிசம். அமைதி மார்க்கம், மக்கள், விலங்குகளை நிம்மதியாக வாழ விடாது. கம்யூனிசம் மக்களுக்கு தேவையான விவசாயம் போன்ற எந்த தொழிலையும் துவங்க, தொடர்ந்து நடத்த விடாது. அரபு நாடுகளில் பெட்ரோல் வளம் போல் நேபாளம் நீர் வளம் பெற்றது. நீர் பெட்ரோல் போல் மதிப்பு பெற்றால் இந்தியா, நேபாளம் போன்றவை உலக பணக்கார வரிசையில் நிற்கும்? ஷா ஆட்சி மலரட்டும்.
நேபாளம் பூட்டான் ஸ்ரீலங்கா ஆகியவை இந்தியாவில் இணைய வாய்ப்பிருக்கிறது. அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தால் அதன் மக்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்கள்
Maa Kaa Paa
யார் உங்க உறவுகாரண
எங்கெல்லாம் கம்யூனிஸ்ட் உள்ளனரோ அங்கெல்லாம் நாடு உருப்படாது. தற்போது நடப்பது நேபாளத்திற்கு நல்லது.மேலும்
-
தமிழகம் மேற்குவங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்