கம்போடியாவில் உயிரிழந்த சென்னை வாலிபர் உடலை கொண்டு வர அரசு உதவிட கோரிக்கை

சென்னை: விசா காலாவதியானதால் மன உளைச்சலில் இருந்த சென்னை வாலிபர், கம்போடியா நாட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை சென்னை கொண்டு வர உதவ வேண் டும் என, விஜயகுமாரின் குடும்பத்தினர், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை பாடி, ராஜா தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மூத்த மகன் விஜயகுமார், 27. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.

குடும்ப சூழலால், 2022ம் ஆண்டு, தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா நா ட்டிற்கு சென்று, அங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார்.

இவருடன், தமிழகத்தை சேர்ந்த கோபி, சுஷில்குமார் ஆகியோரும் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் மூவர் விசாவும் கடந்தாண்டு காலாவதியானது. இதனால், விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி விஜயகுமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மாரடைப்பால் உயிரிழந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிந்தது.விஜயகுமாரின் உடலை சென்னைக்கு கொண்டு வர, 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிகிறது. இதனால் அவரது குடும்பத்தினர், அரசின் உதவியை நாடியுள்ளனர்.

விஜயகுமாரின் தந்தை மாணி க்கம், தள்ளுவண்டி கடை வைத்துள்ளார். தாய் மாற்றுத்திறனாளியாகவும், சகோதரர் மனவளர்ச்சி குறைபாடுடன் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தமிழக அரசு ம், மத்திய அரசும், துாதரகங்களிடம் பேச்சு நடத்தி, விஜயகுமாரின் உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement