கிரைம் கார்னர்

18 சவரன் நகைகள் மாயம்

பெரம்பூர்: பெரம்பூர், சுந்தரவிநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி, 29. நேற்று முன்தினம், பீரோவில் இருந்த 18 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. செம்பியம் போலீசில் நேற்று புகார் அளித்தார். போலீசார், இந்துமதியின் கணவர் கவுதமை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.



முதியவரிடம் மொபைல் போன் பறிப்பு

துரைப்பாக்கம்: பெருங்குடி பகுதியைச் சேர்ந்த விஜயராகவன், 72 , இம்மாதம் 3ம் தேதி, வீ ட்டுக்கு நடந்து சென்றபோது, இரண்டு சி றுவர்கள் சூழ்ந்து, அவர் வைத்திருந்த மொபைல் போனை பறித்து தப்பினர். 16, 17 வயதுள்ள இரு சிறுவர்களை துரைப்பாக்கம் போலீசார் பிடித்து, சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.



ஆட்டோ திருடிய நபர் கைது

சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை, பூக்கார தெருவைச் சேர்ந்தவர் அன்புராஜ், 50. ஆட்டோ ஓட்டுநர். சைதாப்பே ட்டை, பஜார் சாலையில் நிறுத்தி இருந்த இவரது ஆட்டோ திருடப்பட்டது. சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், 39, என்ப வரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.



மாமூல் வசூலித்த ரவுடி கைது

ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், கக்கன் பாலம் பகுதி கடைகளில், வியாபாரிகளை கத்தி முனையில் மிரட்டியவரை பி டித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த யேசுவா, 24, என்பது தெரிந்தது. பிரபல ரவுடி ராபின் கூட்டாளியான அவரை, போலீசார் கைது செய்தனர்.



வீட்டின் கூரையை பிரித்து திருடிய வாலிபர்

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் வசிக்கும் வெண்ணிலா, 45, கடந்த 3ல், வீட்டை பூட்டி வேலைக்கு சென்றார். இவரது வீட்டு கூரையை பிரித்து உள்ளே இறங்கிய இருவர், வெள்ளி குங்குமச்சிமிழ், பீரோவில் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். விசாரித்த புளியந்தோப்பு போலீசார், திருட்டில் ஈடுபட்ட வியாசர்பாடி, பி.வி., காலனி பகுதியைச் சேர்ந்த அசேன் பாஷா, 25, என்பவரை கைது செய்தனர். அவரின் கூட்டாளியை தேடி வருகின்றனர்.



தலைமறைவு குற்றவாளி கைது

பழவந்தாங்கல்: பழவந்தாங்கலைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், 2020ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், நங்கநல்லுாரைச் சேர்ந்த செல்லபாண்டி, 33, உள்ளிட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், ஜாமினில் வெளியே வந்த செல்லபாண்டி தலைமறைவானதால், கடந்தாண்டு நவ., மாதம், அவரை கைது செய்து ஆஜர்படுத்த, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று முன்தினம், செல்லபாண்டியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



சிறுவனை தாக்கிய வாலிபர் சிக்கினார்

ஆயிரம் விளக்கு: சூளைமேடு பகுதியைச் சேர்ந்த முனியம்மாள், 68, ஆயிரம் விளக்கு, சுதந்திரா நகர் அருகே பூக்கடை மற்றும் காய்கறி கடை நடத்தி வருகிறார். சுதந்திரா நகர் பூங்கா அருகே நடந்து சென்ற இவரது 15 வயது பேரனை, கட்டையால் சிலர் தாக்கி விட்டு தப்பினர்.

விசாரித்த போலீசார், ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ், 20, என்பவரை நேற்று கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.



மொபைல் போன் திருடிய 3 பேர் சிக்கினர்

கோயம்பேடு: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவா, 28, புதுச்சேரி சென்று, நேற்று முன்தினம் அதிகாலை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார்.

அவரது மொபைல் போனும், அங்கே துாங்கி கொண்டிருந்த சுரேஷ் என்பவரது போனும் திருடு போயின. கோயம்பேடு போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட ஆலந்துாரைச் சேர்ந்த பிரேம்நாத், 24, சிம்மச்சலம், 27; விஜய், 23, ஆகிய மூவரை கைது செய்தனர். மூன்று போன்களை பறிமுதல் செய்தனர்.



462 கிலோ கஞ்சா ஆவடியில் அழிப்பு

ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில், 49 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 462 கிலோ கஞ்சா பொருட்களை அழிக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள ஜி.ஜே., மல்டி கிளேவ் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள இன்சுலேட்டர் இயந்திரத்தில் கொட்டி, நேற்று அவை அழிக்கப்பட்டன.



பூட்டை உடைத்து 3 சவரன் திருட்டு

பெருங்களத்துார்: பெருங்களத்துார், என்.ஜி.ஓ., காலனி, அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், நேற்று முன்தினம், வீட்டை பூட்டி குடும்பத்தினருடன் கும்பகோணத்திற்கு சென்றார்.

நேற்று காலை திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே, பீரோவில் இருந்த மூன்று சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.



பெண்கள் விடுதியில் திருட்டு

செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, கருணாநிதி தெருவில், வேங்கம்பா என்ற பெண்கள் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் மதியம், 30 வயது மதிக்கத்தக்க ஆண், விடுதிக்குள் புகுந்து, இரண்டு பையை திருடி சென்றார்.

அதில், இரு பெண்களின் இரண்டு லேப்டாப், ஒரு மொபைல் போன் மற்றும் 4,500 ரூபாய் இருந்தது. பெண்கள் மற்றும் விடுதி நிர்வாகம் அளித்த புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

அறையில் புகுந்து திருட்டு வாலிபர் கைது

வானகரம்: வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியில் செயல்படும், உள் அலங்கார தொழில் செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு வடமாநில ஊழியர்கள், அதே நிறுவனத்தின் இரண்டாவது மாடி அறையில் தங்கியுள்ளனர்.

கடந்த 1ம் தேதி, இந்த அறையில் புகுந்த மர்ம நபர், 30,000 ரூபாய் மற்றும் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடிச் சென்றனர்.

புகாரை பெற்ற வானகரம் போலீசார் விசாரித்ததில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் மணிமேகலை என்பவரின் மகன் ஆகாஷ், 19, என தெரிந்து, நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.



--

போதைப் பொருள் வைத்திருந்த மூவர் கைது

சென்னை: அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சூளைமேடு போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற மூவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, 25 கிராம் மெத் ஆம்பெட்டமைன் எனும் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், சூளைமேடு விஜய், 27, பட்டாபிராம் முஜிபூர் ரகுமான், 30, கோயம்பேடு வீரப்பன், 31, என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து போதைப் பொருள் மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

--

பொதுமக்களை மிரட்டிய

ரவுடிகள் இருவர் கைது

ஓட்டேரி: ஓட்டேரி, பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில், போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கத்தியுடன் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், ஓட்டேரி ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்த குமார், 22, மற்றும் ராஜ்குமார், 22, என்பதும், இவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

*

ஆட்டோ மெக்கானிக்

துாக்கிட்டு தற்கொலை

புளியந்தோப்பு: புளியந்தோப்பு பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, 45. இவரது கணவர் வெங்கடேஷ், 50; ஆட்டோ மெக்கானிக்.

கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வெங்கடேஷ், நேற்று மதியம் 12:00 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத போது, மது போதையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

--

Advertisement