மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை முறையான விசாரணை கோரி முற்றுகை
ஜெ.ஜெ.நகர்: மாற்றுத்திறனாளி பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து, முறையாக விசாரணை நடத்தக்கோரி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
பாடி, டி.வி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் சூர்யா, 39; டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர். இவரது மனைவி சுனிதா, 34. வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளி.
கடந்த 3ம் தேதி வீட்டில், சுனிதா துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சுனிதா தற்கொலை குறித்து, ஜெ.ஜெ.நகர் போலீசிற்கு, சூர்யா தகவல் தெரிவித்தார். ஜெ.ஜெ.நகர் போலீசார், சுனிதா உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.
இந்நி லையில், சுனிதா மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்தக்கோரி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்றிரவு, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், செய்கை மொழி பெயர்ப்பாளர் விஜயா பாஸ்கரன் கூறுகையில், ''கணவர் அளித்த மன உளைச்சலால் சுனிதா தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து, தன் நண்பர்களிடம் சுனிதா ஏற்கனவே கூறியுள்ளார். போலீசார் முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
மேலும்
-
அமெரிக்காவுக்கு எதிரான போர்; ஈரானுக்கு ரகசிய தகவல்களை வழங்கியது ரஷ்யா
-
சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? குலதெய்வம், பரிகார கோவிலை நாடும் அரசியல்வாதிகள்
-
பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
5 நாட்களாக சரிந்த நிலையில் இன்று உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு
-
அமெரிக்கா உடனான போர் விவகாரத்தில் மவுனம்; ஐநா மீது ஈரான் அதிருப்தி
-
காசி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா