ஈரானின் டிரோன் தாங்கி கப்பல் மீது தாக்குதல்; வீடியோ வெளியிட்டது அமெரிக்கா
வாஷிங்டன்: ஈரானின் டிரோன் தாங்கி கப்பலை தாக்கியதாக அறிவித்துள்ள அமெரிக்கா, தாக்குதல் நடத்திய வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. . ஈரான் முஸ்லிம் புரட்சிகர காவல்படையின் கட்டுப்பாட்டு மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்கள் மற்றும் ராணுவ விமான நிலையங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அண்மையில் இலங்கை அருகே சென்று கொண்டிருந்த ஈரானின் போர் விமானத்தை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்தது. இந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்த ஈரான், அமெரிக்கா வருந்தும் வகையில் எங்களின் பதிலடி இருக்கும் என்று எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில், ஈரானின் டிரோன் தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அமெரிக்க சென்ட்ரல் கமென்ட், ஈரானின் கடற்படை மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குவது தொடரும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வீடியோவில் பெரிய விமானம் தாங்கி கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும்
-
பாலக்காடு - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில்; மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி
-
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; கர்நாடகா முதல்வர் சித்தராமையா
-
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும்; ராஜ்நாத்சிங் எச்சரிக்கை
-
இயற்கை விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும்: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
-
எம்எல்ஏ சீட் வாங்கியே தீரணும்; சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் போட்டா போட்டி
-
நேபாளத்தில் ஆட்சியைப் பிடிக்கும் ராப் பாடகர்... யார் இந்த பாலென் ஷா தெரியுமா?