குளிர்கால பாராலிம்பிக்கில் சாதனை
மிலன்: இத்தாலியின் மிலன், கார்டினா நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வது சீசன் நேற்று துவங்கியது. இதில், முதன்முறையாக 56 நாடுகளை சேர்ந்த 616 பேர் பங்கேற்கின்றனர். இதற்கு முன், 2018ல் தென் கொரியாவில் நடந்த போட்டியில் 49 நாடுகளை சேர்ந்த 564 பேர் பங்கேற்றது அதிகம். ஐஸ் ஹாக்கி, ஸ்னோபோர்டு உள்ளிட்ட 6 விளையாட்டுகளில், 79 பதக்கப் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தியா சார்பில் ஒருவர் கூட தகுதி பெறவில்லை. இம்முறை அதிகபட்சமாக 160 வீராங்கனைகள் களமிறங்க இருப்பது சாதனை. இதற்கு முன், பீஜிங் குளிர்கால பாராலிம்பிக்கில் (2022) 136 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி
இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், பிரான்சின் டயான் பாரி மோதினர். இதில் ஏமாற்றிய வீனஸ் 3-6, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
கிறிஸ்டல் பேலஸ் வெற்றி
லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் டாட்டன்ஹாம், கிறிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின. கிறிஸ்டல் பேலஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 29 போட்டியில், 10 வெற்றி, 8 'டிரா', 11 தோல்வி என 38 புள்ளிகளுடன் கிறிஸ்டல் பேலஸ் அணி 13வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஆர்சனல் அணி (67 புள்ளி) உள்ளது.
எக்ஸ்டிராஸ்
* சத்தீஸ்கரில், வரும் மார்ச் 26 முதல் ஏப். 6 வரை, 'கேலோ இந்தியா' பழங்குடியினர் விளையாட்டு முதல் சீசன் நடக்கவுள்ளது. இதில் தடகளம், கால்பந்து, ஹாக்கி, பளுதுாக்குதல் உள்ளிட்ட 7 வகையான விளையாட்டுகள் நடக்கவுள்ளன.
* பஞ்சாப் மாநிலம் பாட்யாலாவில் இந்திய ஓபன் 'த்ரோ' போட்டிக்கான 5வது சீசன் இன்று துவங்குகிறது. குண்டு எறிதலில், ஆசிய விளையாட்டில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் 31, பங்கேற்கிறார்.
* ஆஸ்திரேலியாவின் லான்செஸ்டன் நகரில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி 1-6, 3-6 என சீனாவின் செங்யியி யுவானிடம் தோல்வியடைந்தார்.
மேலும்
-
அமெரிக்காவுக்கு எதிரான போர்; ஈரானுக்கு ரகசிய தகவல்களை வழங்கியது ரஷ்யா
-
சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? குலதெய்வம், பரிகார கோவிலை நாடும் அரசியல்வாதிகள்
-
பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
5 நாட்களாக சரிந்த நிலையில் இன்று உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு
-
அமெரிக்கா உடனான போர் விவகாரத்தில் மவுனம்; ஐநா மீது ஈரான் அதிருப்தி
-
காசி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா