கேரளம் என பெயர் மாற்றிய தருணம்; மோடி மகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றியது மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
கேரளா மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்களுக்கு நமஸ்காரம். மக்களே நீங்கள் தான் என் கடவுள். கேரளாவை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அதனை பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி அரசு நனவாக்கி உள்ளது. இந்த அழகான இடத்திற்கு இப்போது தான் சரியான பெயர் கிடைத்துள்ளது. அனைவரின் முயற்சிகளுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கேரளம் என பெயரை மத்திய அரசு மாற்றியிருப்பது, மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.
நடவடிக்கை
கேரள வெள்ளத்தின் போது மீனவர் சமூகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. தங்கள் உயிரை பணயம் வைத்தும் பல உயிர்களை காப்பாற்றிய அவர்களின் துணிச்சலை உலகம் கண்டது. நாடு சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீனவர் சமூகத்தினரின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. எங்கள் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
டிஜிட்டல் தளம்
கேரளத்தின் ஒவ்வொரு குடும்பமும் செழிப்பைப் பெறுவதே எங்கள் நோக்கம். இது வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடித்தளமாகவும் மாறும். வளர்ச்சி அடைந்த கேரளத்தை உறுவாக்க வழிவகுக்கும். தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மீனவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரே இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதும் அவர்களுக்கு எளிதாகிவிட்டது. முந்தைய ஆட்சி காலத்தில் பல ஆண்டுகளாக மீனவர் சமூகத்தை புறக்கணித்தனர்.
ரூ. 1400 கோடி
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பாஜ-தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், கேரளத்திற்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீன்வளத் துறை வேகமாக முன்னேறி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பாரதம் நன்றாகத்தான் இருக்கிறது . பெட்ரோலிய பொருட்கள் பற்றாக்குறை என புரளியை கிளப்புகிறானுங்க
இடத்துக்கு தகுந்த மாதிரி டிரஸ், பேச்சு, நடிப்பு சூப்பர். அரசு பணத்தில் விளம்பரம் போடுவதில் திராவிட கட்சிகளை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் ஏழை பங்காளர்.
மகாதேவா உனக்கு ஒரு ரொட்டி துண்டு போதும்.
கேரளாவின் பெயர் மாற்றம் போல தமிழ் நாடு பெயரையும் தமிழகம் என மாற்ற வேண்டும். அகம் என்பது பழந்தமிழர் வாழ்வியலில் உள்ளம், மனம், அல்லது உள்புறம் என்று பொருள்படும். குறிப்பாக, தலைவன்-தலைவிக்கிடையேயான காதல், இல்லற வாழ்க்கை, மற்றும் உள்ளத்து உணர்ச்சிகளைப் பற்றிப் பேசும் இலக்கியப் பகுதி அகப்பொருள் அகம் ஆகும். இது புறம் வீரம், போர், பொதுவாழ்க்கை என்பதிலிருந்து வேறுபட்டு, வெளியுலகிற்குத் தெரியாத மன உணர்வுகளைக் குறிக்கும். அகம் என்பது வாழ்வின் அக-உணர்வுகளையும் காதலையும் குறிக்கும் ஒரு முக்கியமான தமிழிலக்கண மற்றும் இலக்கியக் கருத்தாக்கமாகும். ஆகவே தமிழ் நாடு என்பதையும் தமிழகம் என மாற்ற வேண்டும்.
சட்ட பெயராக தமிழ் நாடு என்பதே போதும். எப்போதும் போல தமிழ் நாடு மற்றும் தமிழகம் என இரு பதங்களையும் நாம் வழக்கம் போல பயன்படுத்துவோம்.
பாவம்
உருட்டு உருட்டு கண்ணா நல்லா உருட்டு, அவன் அவன் GAS PETROL DESEL என்று அல்லாடி கொண்டு இருக்கிறான், நீ 8400 கோடி சொகுசு விமானத்தில் பெட்ரோல் போட்டு கொண்டு சுற்றி கொண்டு இருக்க இந்த வேளையில் அரசு PETROL சிக்கனம் கடைபிடியுங்க உங்க கார் பின்னல் 200 கார் இதற்க்கு பெட்ரோல் என்று செலவு
சிக்கனமா அப்படியென்றால் என்னவென்று கேப்பார் modiji
மோடிஜி அமெரிக்காவை கண்டு பயம் கொண்டுள்லா ர். இந்திரா ஜி மாதிரி . தைரியம் கிடையாஸ்து. வாசி savadaal
ஆகூர் உனக்கு மூவாயிரம் அதிகம்
உன் பெயரில் ms இருக்கே mrமேலும்
-
விளிம்பு நிலை மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ராஜூ பி.புத்ரன்
-
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
-
போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!
-
வளைகுடா நாடுகளின் வங்கிகள்,நிதி நிறுவனங்களை தாக்குவோம்; ஈரான் அறிவிப்பு
-
வீரன்டா
-
கடமையை நிறைவேற்றாமல் மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக: பிரதமர் மோடி குற்றச்சாட்டு