சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிப்பு!
புதுடில்லி: சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், லோக்சபாவில் இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டது.
சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத், எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பதிலடி கொடுத்து ஆவேசமாக பேசினார்.
அவர் கூறியதாவது; நாட்டின் நலன்களில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் கூறுவது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளாகும். பிரதமர் மோடி ஒருபோதும், எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும், தனிப்பட்ட அரசியல் மோதல்களுக்காக பார்லியை தவறாக பயன்படுத்த வேண்டாம். சபாநாயகருக்கு எதிரான இந்தத் தீர்மானம், சில தலைவர்கள் அல்லது சில குழுக்களின் கர்வத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
கேள்வி கேட்க பணம் வாங்கியதற்காக 11 எம்பிக்கள் நீக்கப்பட்டனர், அவையில் மிளகுத்தூள் தூவப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்த போதிலும், தற்போது நடப்பது போன்ற நாடகப் போராட்டங்களை இதுவரை நான் பார்த்ததில்லை, என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விவாதம் முடிவில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. அவையில் பாஜ தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிறகு ஏன் நான் தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் சொன்னதுக்கு ஜி வாயே திறக்கவில்லை ? அமெரிக்கா வர்த்தக டீல் காக ரஷ்யா வை விரோதமாக்கினார் ?
ஏல சொம்பு நாதன்... உனக்கு எதுக்கு சொல்லணும்
பாகிஸ்தான் நாட்டுக்காரன் நமது ராணுவ வீரனின் தலையை வெட்டி எடுத்து சென்ற போதும்.... மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போதும்...பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்தாமல்.... நமது ராணுவத்தின் கைகளை கட்டிப் போட்டு இருந்தார்கள் அன்றைய கான் கிராஸ் ஆட்சியாளர்கள்.... ஏன் நீங்கள் பதில் தாக்குதல் நடத்தவில்லை என்று கேட்டதற்கு.... அமெரிக்கா எங்களை மிரட்டியது என்ற உண்மையை சொன்னது அப்போதைய அரசில் அங்கம் வகித்த ஒருவர்... இவர்கள் அடுத்தவர்களை குறை கூறலாமா ?
இன்னும் ஏழெட்டு போர்களை நிறுத்தினேன். நோபல் பரிசு வேணும்னு கேட்டார். உலகமே சிரித்தது. நாகரீகம் கருதி மோதி சிரிக்கவில்லை.
அவர்கள் சரியில்லை என்று தானே இவர்கள் அரசாள்கிறார்கள் ...
ஒபாமா ஆற்றிய உரை.......
மிகச் சரியாகப் போய்க் கொண்டிருந்த நமது நாட்டை நமது அதிபர் டிரம்ப் வலுவிழந்த நாடாக மாற்ற அவரால் முடிந்தவரை சேவைகள் செய்து வருகிறார்
ஒரு நாட்டின் அதிபருக்கு ராஜதந்திரம் மிகவும் முக்கியம். அதுபோல வெளியுறவு கொள்கை மிகவும் முக்கியம்.. வெளியுறவு கொள்கையில் நமது நாடு களையிழந்து காணப்படுகிறது.. அதற்கு உதாரணம் ஒன்றை சொல்கிறேன்.. உலக நாடுகளை விடுங்கள் இந்தியாவை எடுத்துக் கொள்வோம்
இந்தியாவை தப்பா புரிஞ்சு விட்டார் டிரம்ப். இந்த இந்தியா பழைய இந்தியா அல்ல. நாம் என்ன செய்தாலும் அடங்கி போகும் நிலையில் இன்று இந்தியா இல்லை. காரணம் இப்போது இருக்கும் இந்தியா மோடி இந்தியா.
மோடி ஒன்று சாதாரணமானவர் அல்ல. மிகப்பெரிய ராஜதந்திரி.. எந்த நிலையிலும் அவர் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் செய்யும் செயல் ஒவ்வொன்றும் நாட்டு நலனுக்காக மட்டுமே இருக்கும்.
ஒரு நாட்டின் எக்கனாமி 11 வது இடத்தில் இருந்து 11 வருடத்திற்குள் நாலாவது இடத்திற்கு கொண்டு வருவது சாதாரணமானது அல்ல. அதன் பின்னால் மிகப் பெரிய உழைப்பு இருக்கிறது . அதற்குத் தகுந்தாற் போல் அவருடைய அமைச்சரவை சகாக்கள் மிகச் சிறந்தவர்கள். அப்படி ஒரு அணி இந்தியாவுக்கு கிடைத்து விட்டது
பாதுகாப்பு, பொருளாதாரம், ராணுவம், விண்வெளி என்று அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் இந்திய தலைமைகள்..
இப்படியான சூழலில் அவர்களுக்கு வரி விதிக்கிறோம், வரி விதிக்கிறோம் என்று எதிர்ப்பை சம்பாதித்து விட்டோம். அவர்கள் மட்டுமல்ல மொத்த உலக நாடுகளுமே நம்மை மதிக்காத தன்மையை உருவாக்கி விட்டார்கள்
ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு என்று ஒரு மரியாதை இருந்தது. இன்று நமது நட்பு நாடுகளில் ஐரோப்பா நாடுகள் அத்தனையும் இந்தியாவுடன் ஏதோ ஒரு வகையில் ஒப்பந்தங்களை போட்டு விட்டன. நம்மிடம் கலந்து கூட ஆலோசிக்கவில்லை. காரணம் வரி விதிக்கிறோம் என்ற பெயரில் அத்தனை நாடுகளின் நம்பிக்கையும் சீதைத்து விட்டோம்.
டாலர் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது.. மரியாதை குறைந்து வருகிறது. ஆட்சி காட்சி பொருளாக மாறி வருகிறது. அமைச்சர்கள் அத்தனை பேரும் அதிபருக்கு ஜால்ரா போடும் இயந்திரமாக மாறி வருகிறார்கள்
இதுவரை இருந்த அமெரிக்க தலைவர்கள் யாரும் இது போல் டாலரின் நம்பகத்தன்மையை இழக்க விட்டதில்லை.. எதிரியோட பலம் தெரியாமல் நடந்ததில்லை.. அப்படி நடக்கக் கூடாது என்பதுதான் ராஜதந்திரம்
இப்போது நமது செயல்பாடுகளை பொறுத்த வரைக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் அனைவரையும் ஒன்று சேர்த்த பெருமை நமது அதிபராகிய டிரம்புக்கு சேரும்
நமது நாடு பணக்கார நாடு தான். ஆனால் நாம் கொண்டிருக்கும் கடன் 35 டில்லியனுக்கு மேல் வருகிறது, ஆனால் அமெரிக்காவின் GDP இதைவிட கம்மி குறைந்து கொண்டே வருகிறது.. ஆனால் இந்தியாவின் கடன் குறைந்து கொண்டே வருகிறது. அதன் GDP கூடிக்கொண்டே வருகிறது
நாட்டை ஆளுபவர்கள், ஒரு வளரும் நாட்டை, நம்ம ராஜதந்திரத்தோடு நடத்தி நமது முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும். ஆனால் நாம் அந்த மாதிரி செய்ய முடியாமல் போய்விட்டது
நாம் செய்த வினைப் பயனாக, இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் ஒரு மறைமுக கூட்டணியை உருவாக்கி விட்டார்கள். இனி இதே தகர்க்க பல வருடங்கள் ஆகலாம்..
இனிமேலாவது இதை புரிந்து நமது அதிபர்கள் நடக்க வேண்டும் என்பது கேட்டுக்கொள்கிறேன்
நம்பிட்டோம்
நீ நம்பாதே . அறிவாலயத்துல கூழ் ஊத்துறாங்க போய் வாங்கி குடி .மேலும்
-
விளிம்பு நிலை மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ராஜூ பி.புத்ரன்
-
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
-
போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!
-
வளைகுடா நாடுகளின் வங்கிகள்,நிதி நிறுவனங்களை தாக்குவோம்; ஈரான் அறிவிப்பு
-
வீரன்டா
-
கடமையை நிறைவேற்றாமல் மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக: பிரதமர் மோடி குற்றச்சாட்டு