'ஊடக சான்றளிப்பு அனுமதியுடன் விளம்பரம் வெளியிட வேண்டும்'

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட ஊடக கண்காணிப்பு மையத்தை, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் ஆய்வு மேற்கொண்டார்.


பின், அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களின் செலவி-னங்களை கண்காணித்து கணக்கிட்டு, தேர்தல் செலவின பார்-வையாளர்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.

ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மூலம் 'டிவி' மற்றும் உள்ளூர் கேபிள் 'டிவி'க்களை கண்கா-ணிப்பதற்கும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான செய்திகளோ அல்லது அனுமதி பெறாத விளம்பரங்களோ வெளியிடப்படுகின்றதா என்பது குறித்தும் இக்குழு கண்கா-ணிப்பு பணியை மேற்கொள்ளும்.

தேர்தல் நடத்தை விதிமுறைக-ளுக்கு உட்பட்டு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் சான்றிதழ் பெற்ற விளம்பரங்கள் மட்டுமே நாளிதழ்கள், டிவி, உள்ளூர் டிவிக்களில் வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார்.ஆய்வின் போது டி.ஆர்.ஓ., விமல்ராஜ் உடனிருந்தார்.

Advertisement