வருமானத்தை மறைத்த நவாஸ் கனி: விசாரணையை துவக்கியது வருமான வரித்துறை
சென்னை: வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனிக்கு எதிராக விசாரணை துவக்கப்பட்டு விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ்கனி.
கடந்த 2019 மற்றும் 2024ம் ஆண்டு தேர்தல்களில் நவாஸ்கனி தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, வருமானத்துக்கு அதிகமாக 23.58 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளார் என்பதால், வருமான வரித் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வருமான வரித் துறை தரப்பில், 'வருமான வரித் துறை வசமிருந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஏற்கனவே விசாரணையை துவக்கி உள்ளோம். நவாஸ்கனிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சில ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார். அவரிடம் நடத்தப்படும் விசாரணை அடிப்படையில், அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.
நவாஸ்கனி தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதேபோல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து வழக்கு பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக் கோரிய வழக்கையும் அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
முருகன் கோவில் மலையில் பிரியாணி சாப்பிட்டு ஆடு வெட்ட கிளம்பியவன்... தீம்க்காவின் போர்வாள் - ஆனால் வேறு கட்சியில் இருக்கிறான். மாடலின் இந்து மத வெறுப்பு லீலை.
அப்பன் திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் துடங்கிவிட்டது. இனி சூரசம்ஹாரம்தான். மலைமீது மாட்டுப்பிரியாணி உண்ட வாய் இனி ஜெயிலில் கொடுக்கப்படும் மணி அடித்தால் சோறு என்கிற நிலையை உருவாக்கிவிடுவான் எங்கள் முருகன். சிவனோடு கூட மோதி தப்பிப்பாய் அவன் கருணையால். ஆனால் சிவனின் மைந்தன் முருகனிடம் மட்டும் விளையாடாதே.. அவனிடம் உன்போன்றோருக்கு கருணையெல்லாம் கிடைக்காது. பஸ்பம் ஆகிவிடுவாய் விரைவிலே
இது போன்று சி.பி,யைக்கு உட்பட்ட வழக்குகள் நடந்துகொண்டிருக்கும் நபர்களை தேர்தலில் நிற்க அனுமதிக்கக்கூடாது வழக்குகள் முடிந்ததும் அவர் நிரபராதி என்று தெரிந்த பின்பே தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும் இல்லையென்றால் விசாரணை என்பது கேலிக்கூத்தாவிடும்
எதற்கும் துணிந்த கள்ளன்
யார்ரா இவன்.. நம்ம ஊர்ல இவனுக்கு என்னடா வேலை??
இந்த இராமநாதபும் எம்.பி. நவாஸ்கனிதான் ST Courier ன் ஓனர். French Courier ன் பங்குதாரர்.மேலும்
-
நியோமேக்ஸ் சொத்து ஏலம் பங்கேற்க போலீசார் அழைப்பு
-
கொள்முதல் நிலையத்திற்கு அறுவடை நெல்லை கொண்டு வருவதில் சிக்கல் பதிய மறுப்பதால் பரிதவிப்பு
-
சிந்திக்க வைக்கும் புதுக்கவிதைகள்
-
நீதிபதி முன் ஆஜர்படுத்துவதில் 25 நிமிடம் தாமதம் கொலை வழக்கில் ஜாமின் கேட்டவர் மனு தள்ளுபடி
-
குப்பைக்கு தீ வைத்த போது தீயில் சிக்கி காவலாளி மரணம்
-
மழையால் கண்ணீர் வடிக்கும் வடுகபட்டி நெல் விவசாயிகள்