கரூர் பகுதியில் பிரசாரம் செய்ய 9 இடங்களை அறிவித்த போலீசார்

கரூர்:கரூர் சட்டசபை தொகுதியில், பொதுக்கூட்டம் மற்றும் தெரு முனை பிரசார கூட்டம் நடத்த, ஒன்பது இடங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்., 23ல் நடக்கிறது. 30ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில், கரூர் சட்ட-சபை தொகுதியில், கரூர் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம், தெரு முனை பிரசாரம் நடத்த, அர-சியல் கட்சிகளுக்கு ஒன்பது இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, போலீசார் அறிவித்துள்ளனர்.

அதன்படி, 80 அடி சாலை, உழவர் சந்தை அருகில், குமரன் சிலை அருகில், லைட் ஹவுஸ் கார்னர், தலைமை தபால் நிலையம், வேலுச்சாமிபுரம், ஆத்துார் பிரிவு, கோவிந்தம்பா-ளையம், பெரிய கோதுார் மந்தை ஆகிய, ஒன்பது இடங்களில் பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.

மேலும், ஊர்வலம் நடத்த கரூர் லைட்ஹவுஸ் கார்னர், மக்கள் பாதை, பழைய திண்டுக்கல் சாலை, ஆசாத் சாலை, கரூர் மாநக-ராட்சி அலுவலகம் ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement