வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோர் 100 மீ. எல்லைக்கோடு தாண்டக்கூடாது (படங்கள் உண்டு/ திரு.அருண்)
கோவை: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல், 30ல் துவங்குகிறது; ஏப். 6ல் முடிகிறது. 7ல் பரிசீலிக்கப்படும். 9ல் வாபஸ் பெறுவோர் மனுக்களை திரும்ப பெறலாம். அதன்பின், சின்னங்கள் ஒதுக்கீடு செய்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அந்தந்த சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். கோவை தெற்கு தொகுதிக்கு, மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படும்.
மனு தாக்கல் செய்ய வரும் அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் திரட்டிக் கொண்டு வரக்கூடாது என்பதற்காக, அலுவலகம் அருகே உள்ள ரோடுகளில், 100 மீட்டர் எல்லைக்கோடு நேற்று வரையப்பட்டது. ஒசூர் ரோட்டில் அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகை உள்ளது. 100 மீட்டர் எல்லைக்குள் வருகிறதா என அளந்து பார்க்கப்பட்டது. 100 மீட்டர் கடந்ததால், கட்சி அலுவலகம் செயல்படுவதில் சிக்கல் இல்லை.
இதேபோல், மற்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் இருந்து 100 மீட்டர் எல்லைக்கோடு வரைய தேர்தல் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
@block_B@
ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலையை சுற்றிலும் டிஜிட்டல் விளம்பர பலகைகள் நிறுவப்பட்டு உள்ளன. அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் படங்களுடன் அரசின் சாதனை விளம்பரங்கள் இருந்தன. அவை அகற்றப்பட்டு, 100 சதவீத ஓட்டுப்பதிவு தொடர்பான விளம்பரங்கள் வைக்கப்பட்டன. block_B
மேலும்
-
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
-
சவுதியில் இந்தியர் உயிரிழப்பை உறுதி செய்தது மத்திய அரசு
-
அமெரிக்காவின் ரூ.1000 கோடி போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்!
-
ஈரானில் சிக்கியுள்ள மகனை மீட்க வேண்டும்; கேரளாவை சேர்ந்த பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை
-
ஈரானின் கார்க் தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் பரிசீலனை; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நடவடிக்கை
-
டிவி நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்