சட்டக்கல்லுாரி மாணவரை தாக்கிய மூவருக்கு வலை
திருப்போரூர்:சென்னை, சோழிங்கநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம்,18, இவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், கல்லுாரி அருகே இருந்தபோது அந்த வழியாக பைக்கில் சென்ற மூன்று பேர் மாணவர் மீது மோதுவதுபோல் சென்றதாக தெரிகிறது.
இதனால் பயந்துபோன மாணவர் அவர்களை நிறுத்தி கேட்டுள்ளார்.
அப்போது இருதரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டு மூன்று பேரும், சட்ட கல்லுாரி மாணவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த மாணவர் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் மருத்துவமனைக்கு வந்து மாணவரிடம் விசாரித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவரை தாக்கிய மூன்று பேரை தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement