த.வெ.க., வேட்பாளரானார் முன்னாள் சபாநாயகர் மகன்

ராசிபுரம்: ஜெயலலிதா ஆட்சியில் சட்டசபை சபாநாயகராக இருந்தவர் தனபால்.

இவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வன், கடந்த 15 ஆண்டுகளாக தந்தையுடன் அ.தி.மு.க.,வில் பணியாற்றி வந்தார்; அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகியாகவும் பதவி வகித்தார்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தார்.

இவருக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தான் பெயர் சூட்டினார். இவரது திருமணத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னின்று நடத்தினார்.

இத்தகைய அரசியல் பாரம்பரிய பின்னணி கொண்ட லோகேஷ், சமீபத்தில் அ.தி.மு.க., வில் இருந்து விலகி, விஜயின் த.வெ.க.,வில் இணைந்தார்.

இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட த.வெ.க., வேட்பாளர் பட்டியலில், ராசிபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ௨௦௧௧ தேர்தலில் தனபால் வென்ற தொகுதியில், அவரது மகனை த.வெ.க., களமிறக்கியுள்ளது.

Advertisement