பாத்திர தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்

அனுப்பர்பாளையம்:அனைத்து பாத்திர தொழிற்சங்களின் கூட்டு கமிட்டி கூட்டம் கூட்டு கமிட்டி தலைவர் வேலுசாமி, தலைமையில், எல்.பி.எப். பாத்திர தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.



கூட்டத்தில், பாத்திர தொழிலாளர்களின் புதிய கூலி உயர்வு சம்மந்தமாக நடந்து வரும் பேச்சுவார்த்தை நிலை குறித்து, தொழிலாளர்களுக்கு விளக்க, 23ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆத்துப்பாளையம் ரோடு, காமாட்சி அம்மன் உலோக பாத்திர தொழிற்சங்க அலுவலகத்தில் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), குணசேகரன் (ஏ.டி.பி.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.), சதீஷ்குமார் (ஏ.ஐ.டி.யு.சி.), பாண்டியராஜன் (எச்.எம்.எஸ்.), அர்ஜூனன் (காமாட்சி அம்மன் சங்கம்), மணிமாறன் (எல்.பி.எப்.), ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement