இறக்குமதி கட்டுப்பாட்டு வரி நீட்டிப்பு ஸ்டீல் விலை 25% வரை உயர்வு
புதுடில்லி: கடந்த மூன்று மாதங்களில் உள்நாட்டு ஸ்டீல் விலை 18 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிக இறக்குமதியை தவிர்க்க விதிக்கப்பட்ட பாதுகாப்பு வரி நீட்டிக்கப்பட்டதே இதற்கு காரணம்.
'ஹாட் ரோல்டு காயில்' எனும் 'அதிக வெப்பத்தில் இளகி, உருளைகளின் வழியாக தகடுகளாக உருவாக்கப்படும் ஸ்டீல் விலை டன்னுக்கு 55,900 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 47,317 ரூபாயாக இருந்தது. அதேபோல, ரீபார் எனப்படும் கட்டுமான கம்பியின் விலை, ஒரு டன் 59,800 ஆக அதிகரித்துள்ளது.
இது, முன்பு 47,615 ரூபாயாக இருந்தது. ஈரான் போர்ச்சூழலில் வணிகத்தடைகள் ஏற்பட்டிருந்தாலும் இந்தியாவின் உலோக இறக்குமதி அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாக, உள்நாட்டு ஸ்டீல் விலையில் அழுத்தம் ஏற்படலாம்.
அதேவேளையில், வளைகுடா நாடுகளுக்கான இந்திய ஸ்டீல் ஏற்றுமதியும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆனால், உள்நாட்டில் ஸ்டீல் தேவை வலுவாக இருப்பதால் அது சற்றே குறையலாம்.
கடந்த 2025 ஏப்., முதல் 2026 ஜன., வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஸ்டீல்ஏற்றுமதியில் 8 சதவீதம், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றிருக்கிறது.
சீனாவுக்கு அடுத்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர், நுகர்வோர் இந்தியாதான்
இந்தியாவின் ஸ்டீல் தேவை 2025 - 26ல் 9 சதவீதம் அதிகரிக்கக்கூடும்
மேலும்
-
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
-
சவுதியில் இந்தியர் உயிரிழப்பை உறுதி செய்தது மத்திய அரசு
-
அமெரிக்காவின் ரூ.1000 கோடி போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்!
-
ஈரானில் சிக்கியுள்ள மகனை மீட்க வேண்டும்; கேரளாவை சேர்ந்த பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை
-
ஈரானின் கார்க் தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் பரிசீலனை; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நடவடிக்கை
-
டிவி நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்