யுகாதி பண்டிகையில் வேப்பம்பூ பிரசாதம்

புன்செய்புளியம்பட்டி:தெலுங்கு வருட பிறப்பு (யுகாதி), தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புன்செய்புளி-யம்பட்டி ஊத்துக்குளி அம்மன் கோவிலில், நேற்று காலை சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் ஏராள-மான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மன் உற்-சவர் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உலா நடந்தது. பண்டிகை சிறப்பம்சமாக, அபிஷேகத்தில் வேப்பம்பூ கலந்து

பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. * திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த காடையூர் அலப்-பச்சாகவுண்டன்புதுாரில், மங்களாம்பிகை சமேத மாதேஸ்வரர் கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு அலங்-காரம் செய்து பூஜை நடந்தது.
* காங்கேயம், படியூரை அடுத்த முதலிபாளையம் மானுாரில், கோதண்டராமர் கோவிலில், யுகாதி பண்டிகையை ஒட்டி நேற்று பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதில் இந்தாண்டின் மழையளவு, தானிய விளைச்சல், அரசியல் நிலைமை மற்றும் சுப முகூர்த்தங்-களை பற்றி கணிக்கப்பட்டது.

Advertisement