பண்ணாரியம்மன் உற்சவர் சப்பரத்தில் திருவீதி உலா

புன்செய்புளியம்பட்டி:சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரி-யம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா வரும், 31ம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் விழாவை முன்னிட்டு, பண்-ணாரி அம்மன் உற்சவர், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பவானி-சாகர் சுற்றுவட்டார கிராமங்களில், திருவீதி உலாவாக கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளியம்பாளையம் பகுதியில் மலைவாழ் மக்களின் பீனாட்சி வாத்தியம் முழங்க பண்ணாரியம்மன் திருவீதி உலா நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அம்மன் சப்பரம் செல்லும் சாலை மற்றும் பாலத்தில் நீண்ட வரி-சையில் படுத்து அம்மனை வழிபட்டனர். இவர்களின் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கிராமங்களில் ஊர்-வலமாக கொண்டு செல்லப்பட்ட அம்மனை, மக்கள் வழிநெடுக காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Advertisement