உலகிற்குத் தேவை நல்லிணக்கமே; போர் அல்ல: மோகன் பாகவத் பேச்சு

10

மும்பை: ''போர் என்பது சுயநலத்தின் விளைவாகும். உலகிற்குத் தேவை நல்லிணக்கமே, போர், மோதல் தேவை இல்லை '' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்து உள்ளார்.



மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தர்மத்தை பின்பற்றுவதன் மூலம் நிலையான அமைதியை அடைய முடியும். உலகளாவிய மோதல்களில் பின்னணியில் இருப்பது சுயநல சிந்தனைகளும், ஆதிக்கத்திற்கான ஆசையும் தான்.


போர் என்பது சுயநலத்தின் விளைவாகும். உலகிற்குத் தேவை நல்லிணக்கமே, போர், மோதல் தேவை இல்லை. மனிதாபிமானத்தை இந்தியா பின்பற்றுகிறது. கட்டாய மதமாற்றங்கள் மற்றும் உயர்வு, தாழ்வு மனப்பான்மைகள் இன்னும் நீடித்து கொண்டே தான் இருக்கின்றன.


2 ஆயிரம் ஆண்டுகளாக மோதல்களை தீர்ப்பதற்காக உலகம் பல்வேறு யோசனைகளை சோதித்து பார்த்தும், அவற்றில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். அனைவரும் எப்பொழுதும் ஒன்றே என்ற சிந்தனை வர வேண்டும்.


மோதலில் ஈடுபடாமல் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நோக்கி மாற வேண்டும். ஒழுக்கத்தை கடை ப்பிடிப்பதற்கு தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படுகிறது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

Advertisement