ஏப்., 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி சட்டம்
புதிய வருமான வரிச் சட்டம் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. வரி விகிதங்களில் மாற்றம் இல்லை; ஆனால் விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
*சட்டத்தின் பிரிவுகள் 819லிருந்து 536ஆக குறைப்பு
* கடினமான வார்த்தைகளுக்கு பதிலாக 39 புதிய அட்டவணைகள் மற்றும் 40 சூத்திரங்கள் அறிமுகம்
ஹெச்.ஆர்.ஏ., சலுகை
* 50% விலக்கு பெறும் நகரங்கள் 4ல் இருந்து 8ஆக உயர்வு
* வீட்டு உரிமையாளர் - வாடகைதாரர் குறித்த தகவல் இனி கட்டாயம்
பான் கார்டு கட்டாயம்
* ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வங்கியில் டிபாசிட் செய்ய/ எடுக்க
* ரூ.5 லட்சத்துக்கும் மேல் வாகனம் வாங்க
* ரூ.1 லட்சத்துக்கும் மேல் ஹோட்டல்/ஈவென்ட் செலவுக்கு
* ரூ.20 லட்சத்துக்கும் மேல் சொத்து பரிவர்த்தனை
டிஜிட்டல் கரன்சி
* கிரிப்டோ பரிவர்த்தனை விபரங்கள் வரி துறைக்கு வழங்குதல் கட்டாயம்
* ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சியான சி.பி.டி.சி., அங்கீகரிக்கப்பட்ட பண பரிமாற்ற முறையாக சேர்ப்பு
@block_B@ எளிமையாக்கப்பட்டு உள்ளது இந்த சட்டம் 75,000 பேர் சேர்ந்து பல மணிநேரங்கள் உழைத்து, எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு போன்ற குழப்பமான கலை சொற்கள் நீக்கப்பட்டு, எளிமையாக்கப்பட்டு உள்ளன. மக்களுக்கு எளிமையான விஷயங்களை கொடுத்தால், அவர்கள் அதை எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். புதிய சட்டத்தில் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளதால், சட்ட நுணுக்கங்களுக்காக நீதிமன்றங்களை நாடும் போக்கு இனி குறையும் என எதிர்பார்க்கிறேன். - நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சர்block_B
மேலும்
-
தமிழகத்துக்கு பார்லிமென்ட் நிலைக்குழு பாராட்டு
-
பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு
-
சவுதியில் மேலும் ஒரு இந்தியர் பலி
-
'ஏர் இந்தியா' நிர்வாக அலட்சியத்தால் 8 மணி நேரம் வீணாக பறந்த பயணியர்
-
மேற்காசிய வான்வெளியை தவிர்க்க விமான நிறுவனங்களுக்கு அறிவுரை
-
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகின்றன பார்லிமென்ட் நிலைக்குழு பாராட்டு