சவுதியில் மேலும் ஒரு இந்தியர் பலி

ரியாத்: சவுதி அரேபியாவில் மேலும் ஒரு இந்தியர் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் போரில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்குச் சென்ற ஐந்து இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், சவுதி தலைநகர் ரியாத்தை குறிவைத்து ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியபோது, விழுந்த பாகங்கள் தாக்கியதில் மேலும் ஒரு இந்தியர் உயிரிழந்தார்.

Advertisement