தேர்தல் செலவின பார்வையாளர் கார் மோதியதில் ஒருவர் காயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், தேர்தல் செலவின பார்வையாளர் கார் மோதியதில் ஒருவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் பகுதியில் நேற்று இரவு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி தன் காரில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த தேர்தல் செலவின பார்வையாளர் கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் மது அருந்தி விட்டு படுத்து இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த சோபன்பாபு, 52, என்பவர் மீது எதிர்பாராவிதமாக மோதியது.
இதில், அவர் காலில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
சென்னை, புறநகரில் 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவுது! : அலட்சியம் கூடாது என எச்சரிக்கை
-
தமிழகத்தில் தொழிலா... யோசிக்க வைக்கும் அரசியல்!
-
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம்: டிரம்ப் படத்துடன் நாணயம் வெளியிட முடிவு
-
பதிவுத்துறையில் 'டாப் அப்': லஞ்ச அதிகாரி 'பில்ட் அப்'
-
'இன்னும் 48 மணி நேரம் மட்டுமே அவகாசம்' :ஈரானுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்த டிரம்ப்
-
பதவி இருந்தால் தான் செயல்பட முடியும்: ஆதங்கத்தில் வெடிக்கிறார் நடிகர் சரத்குமார்