அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம்: டிரம்ப் படத்துடன் நாணயம் வெளியிட முடிவு
வாஷிங்டன்: அமெரிக்க சுதந்திர தினத்தின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1776, ஜூலை 4ல் அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. அதன் 250வது ஆண்டு விழாவை இந்தாண்டு பிரமாண்டமாக கொண்டாட வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது. வரும் ஜூலை 4ல் கொண்டாடப்பட உள்ள விழாவை ஒருங்கிணைக்க, விழாக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 250 ஆண்டுகளில் அமெரிக்கா அடைந்த முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள், எதிர்காலத்துக்கான இலக்குகள் போன்றவற்றை முன்னிலைப்படுத்துவதே இந்த விழாவின் நோக்கமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்த 250வது ஆண்டை குறிக்கும் வகையில், சிறப்பு நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை வெளியிட அமெரிக்க நுண்கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் இறுதி அளவுகள் முடிவு செய்யப்பட்டவுடன், இந்த நாணயம் அச்சிடப்படும் என கூறப்படுகிறது. 24 காரட் தங்கத்தில் உருவாக்கப்படும் சிறப்பு நாணயத்தில், அந்நாட்டு அதிபர் டிரம்ப் தன் கைகளை இறுக மூடியபடி, மேஜை முன் சாய்ந்தவாறு இருப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட உள்ளது. இது குறித்து அமெரிக்க நிதியமைச்சக அதிகாரி பிராண்டன் பீச் கூறியதாவது:
நம் நாட்டின் 250வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை நாம் நெருங்கி வருகிறோம். இதையொட்டி, நம் நாட்டின் ஜனநாயகத்தின் நீடித்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில், நாணயங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நாணயங்களில், ஒரு பக்கத்தில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் உருவம் இடம்பெற உள்ளது. ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அவரின் முகம் அதில் இடம்பெற உள்ளதை விட சிறந்த அடையாளம் வேறெதுவும் இல்லை.
அமெரிக்க சட்டத்தின் படி, பதவியில் இருக்கும் எந்தவொரு அதிபரின் உருவமும் அமெரிக்க பணம் மற்றும் சிறப்பு நாணயத்தில் இடம் பெறக்கூடாது.
இருப்பினும், இந்த நினைவு நாணயம், புழக்கத்தில் இருக்கும் பணத்தில் இருந்து வேறுபட்டது. இருப்பினும், இறுதி வடிவமைப்பு மற்றும் அச்சிடுவதற்கான அனுமதி வழங்குவதற்கு கருவூல செயலருக்கே முழு அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, 250வது சுதந்திர ஆண்டு விழாவையொட்டி வெளியிடப்படும் நாணயத்தில் டிரம்ப் இடம் பெறுவது குறித்து ஜனநாயக கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நவீன அமெரிக்கத் துக்ளக்குக்கு எதற்கு நாணயம் சரித்திரக் கேவலம் ஆகிவிடும்?
வரலாற்றில் ஹிட்லருக்கு பின்னால் வந்த கொடுங்கோல் அரசன். தனது பேராசையால், பல நாடுகளை சட்டவிரோதமாக பிடித்து அவர்களை அடிமையாக்குவதில் வல்லவன். பணத்தை மட்டும் கருத்தில் கொண்ட பெருச்சாளி. இவனால் இறந்த அப்பாவி மக்களின் ஆவி இவனையும் இவன் குடும்பத்தையும் அழிக்கும்.
நாசகார சக்திகள் வரலாறில் திரும்ப திரும்ப வருவது வருத்தமே
அமெரிக்கா விடுதலை பெற்றதா ? யாரிடம் இருந்து ? செவ்விந்திய மக்களை ஒழித்து பலதரப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மக்கள் அமெரிக்கர்கள்.
நாணயத்துக்கும் டிரம்ப்புக்கும் என்ன சம்பந்தம்?
பயில்ஸ் வந்து வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த போது எடுத்த படம் போலிருக்கு.
TRUMP சிரித்தபடி இருக்கும் படத்தை வெளியிட வேண்டாமா? அழுது கொண்டிருக்கிறாரே
திராவிட மாடல் சித்தாந்தம்
சுதந்திரத்துக்கு அடுத்து வந்த ஜனாதிபதியின் படத்தை போடுவது பொருத்தமாக இருக்கும். அல்லது ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் நாணயம் வெளியிட்டு யார் நாணயத்துக்கு அதிக கிராக்கி இருக்கிறதோ அதை வெளியிடலாம்.
அந்தநாடு இப்போது இருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இது ஒண்ணுதான் கொறச்சல்? ஈரானுடனான போர் இன்னும் நீடித்தால், உலகம் குறைந்த பொருளாதார வளர்ச்சியையும் அதிக பணவீக்கத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அமெரிக்கா முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பகுதிகளில், சுற்றுலாத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, தேவை குறைந்துவரும் நிலை
(demand destruction) ஏற்கனவே தெளிவாகத் தென்படுகிறது. இதன் விளைவாக, அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடையும். அதே வேளையில், பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் (bond yields) கடுமையாக உயரும். இதெல்லாம் அவருக்குத் தெரியாமலா இருக்கும்? ஈரான் என்ற புலிவாலை பிடித்து விட்டு இப்போது போரை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். மேலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல தினமும் ஈரானுக்கு சவால் மட்டும் விட்டுக் கொண்டே இருக்கிறார்.மேலும்
-
ஓடும் லாரியில் இருந்து தப்பிய நாய்க்கூட்டம்; 17 கி.மீ., தூரம் பயணித்து வீடு திரும்பிய புத்திசாலித்தனம்!
-
புதுச்சேரியில் தனித்துப்போட்டி; கூட்டணியால் தேவையற்ற மன உளைச்சல் என்கிறார் திருமா
-
தொகுதி பங்கீட்டில் தமாகாவுக்கு அதிருப்தியா? பரவிய வதந்திக்கு ஜிகே வாசன் முற்றுப்புள்ளி
-
திமுக- விசிக தொகுதி பங்கீடு முதல் அதிமுக மா.செ கூட்டம் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 24)!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 சரிவு
-
போரின் தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்