சொகுசு பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்; போதை நபர் கைது

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே, தனியார் சொகுசு பஸ்சில் மது போதையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.


கர்நாடக மாநிலம், குடகு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 38. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் திவ்யா சம்ஜத், 21. இவர்கள் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு தனியார் சொகுசு பஸ்சில் நேற்று மாலை, 3:00 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பஸ் சென்றபோது, மது போதையில் இருந்த நாகராஜ், திவ்யா சம்ஜத்திடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதையறிந்த பஸ்சில் பயணம் செய்த சக பயணிகள், நாகராஜை சரமாரியாக தாக்கி, நாட்றம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்த வருகின்றனர்.

Advertisement