போர் வேண்டாம்; ஸ்பெயின் பிரதமரின் வாசகத்துடன் ஏவுகணையை ஏவும் ஈரான்
டெஹ்ரான்: அமெரிக்காவுக்கு கடற்படை தளத்தை வழங்க மறுத்து, போருக்கு எதிராக கருத்து கூறிய ஸ்பெயின் பிரதமரின் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 24 நாட்களாக நீடித்து வருகிறது. குறிப்பாக, வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இந்த நிலையில், போருக்கு எதிராக ஸ்பெயின் பிரதமர் கூறிய வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்தியில், ஸ்பெயின் சான்செஸின் புகைப்படம் மற்றும் "நிச்சயமாக, இந்தப் போர் சட்டவிரோதமானது மட்டுமல்ல, மனிதநேயமற்றது. நன்றி, பிரதமர்" என்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளில் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை ஏவுகணைகளில் ஈரான் ராணுவத்தினர் ஒட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஈரான் மீது தாக்குதல் நடத்த ரோட்டா கடற்படைத் தளம் மற்றும் மோரோன் விமானத் தளத்தை வழங்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்க ஸ்பெயின் மறுத்தது. இதனால், ஸ்பெயினுடனான வர்த்தக உறவுகளை அதிபர் டிரம்ப் துண்டிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (4)
KR india - ,இந்தியா
23 மார்,2026 - 20:34 Report Abuse
நம் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு கிடைக்கப் பட வேண்டிய புகழ், ஸ்பெயின் பிரதமருக்கு கிடைத்து விட்டதே என்ற அங்கலாய்ப்பு இருப்பினும், நமது தரப்பில், தெளிவான எதிர் நடவடிக்கையோ, கண்டனமோ வெளிப்படுத்தாத போது, புகழும், பாராட்டும் மட்டும், எப்படி நம் நாட்டிற்கு கிடைக்கும் ? வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை, அமெரிக்கப் படைகள் சிறைபிடித்த போது, சீனா மற்றும் ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது. நமது மத்திய அரசோ, எங்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக உள்ளது என்று அறிக்கை விட்டது. இப்படி மூக்கு சிந்தி அறிக்கை விட்டதுக்கு பதிலாக, கவுரவமாக, மௌனமாக இருந்து விட்டுப் போயிருக்கலாம் 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
23 மார்,2026 - 18:30 Report Abuse
எல்லா நவீன போர் கருவிகளுடை வசதிகளுடன் வேறு நாடுகளும் இணைந்து இவ்வளவு பெரிய ஜெயண்ட் நாட்டுடன் மோதும் ஈரான் முற்றிலும் போற்றுதலுக்குரிய வீர மிக்க நாடு. 0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
23 மார்,2026 - 14:29 Report Abuse
யாருக்கு 0
0
Reply
ராஜா - ,
23 மார்,2026 - 12:36 Report Abuse
இந்தியா வலுவான எதிர்ப்பைக் கொடுக்க வேண்டும் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement