கட்சி கொடியுடன் காரில் வலம்; புவனகரி தேர்தல் துறை கப்சிப் 

புவனகிரி: புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதியில் கட்சி கொடியுடன் பிரபலங்கள் காரில் வருவதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப். 23ம் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. கார்களில் பொருத்தப்பட்டு இருந்த அரசியல் கட்சி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது.

ஆனால், கீரப்பாளையம், புவனகிரி ஒன்றியத்தில் அரசியல் கட்சியினர் தங்கள் காரில் கட்சி கொடியுடன் வலம் வருகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இதனை கண்டுகொள்வது இல்லை. தேர்தல் ஆணைய உத்தரவை பின்பற்றி விதிமீறும் அரசியல் கட்சியினர் மீது பார பட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement