கஞ்சா விற்ற இருவர் கைது: 6 கிலோ பறிமுதல்
புதுச்சத்திரம்: கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்து, 6 கிலோவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை பகுதியில் கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் போலீசார் நேற்று மாலை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மணிக்கொல்லை கோழிப் பண்ணை அருகே, சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரிக்க முயன்றபோது, போலீசாரை பார்த்த இருவரும் தப்பியோடினர். உடன் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இருவரும் சீர்காழி அடுத்த வள்ளுவக்குடியைச் சேர்ந்த, பாஸ்கரன் மகன் ஜெயபிரகாஷ், 28; சீர்காழி மேலமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, பாலமுருகன் மகன் நவீன், 19; என்பதும், இருவரும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.