நகை பட்டறை உரிமையாளரிடம் திருடியவர் கைது

திருமங்கலம்;திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் முருகன் 53. மார்ச் 17ல் இவர் மதுரையில் 2.5 பவுன் நகையை பாலிஷ் போட்டுவிட்டு ஊருக்கு செல்வதற்காக திருமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார். இங்கிருந்து திருநெல்வேலி செல்வதற்காக பஸ் எங்கு நிற்கும் என அருகில் இருந்தவர்களிடம் விவரம் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் பஸ் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச்சென்று அவர் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு தப்பினார்.

சி.சி.டி.வி., கேமராக்கள் உதவியோடு போலீசார் விசாரித்த போது நகை, பணம் இருந்த பையை பறித்துச் சென்றது திருமங்கலம் அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் 49, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement