சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார், புதுகாலனியை சேர்ந்தவர் ராஜா, 40; கொலை வழக்கில் சிறைக்கு சென்று, கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 ம் வகுப்பு 13 வயது சிறுயிடம் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை மிரட்டினார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement