ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
விழுப்புரம்: ஆற்றில் மீன் பிடித்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த சித்தாத்துார் திருக்கையைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விஷ்ணு, 14; -கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், நேற்று விடுமுறை என்பதால், அதே பகுதியில் உள்ள மலட்டாற்றில் நண்பர்களுடன் 10:00 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, பள்ளமான பகுதியில் விஷ்ணு மூழ்கி இறந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரது உடலை மீட்டனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement