குடிநீரில் கழிவுநீர் மக்கள் கண்ணீர்

போத்தனூர்: மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட, 96வது வார்டுக்குட்பட்ட சங்கம் வீதியில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு ஆழியாறு கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக குடிநீர், கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது.

மண்டல அலுவலகத்தில் புகார் கொடுத்ததும், பணியாளர்கள் வந்து ஓரிடத்தில் தோண்டி பார்த்துவிட்டு, சென்று விட்டனர்.

இரு இடங்களில் தோண்டியும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நேற்று வினியோகிக்கப்பட்ட குடிநீரும் கழிவுநீர் கலந்து வந்தது.

வழக்கம்போல பணியாளர்கள் வந்து, குழி தோண்டி சென்றனர். அதேபோல் சங்கம் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதியிலுள்ள இரு பொது குடிநீர் குழாய்களை அடைத்துவிட்டனர்.

பிரச்னைக்கு தீர்வு காணாமல் பெயரளவு பணி செய்து செல்வதால் எந்த பலனும் கிடையாது. மக்கள் அவதியை தீர்க்க, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

Advertisement