நீச்சல்: சஜன் பிரகாஷ் 'வெள்ளி' * காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நேஷனல்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சஜன் பிரகாஷ், வெள்ளி வென்றார்.
சிங்கப்பூரில், நேஷனல்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவில், இந்தியா சார்பில் சஜன் பிரகாஷ், திர்தேங்க் பெகு பங்கேற்றனர்.
தகுதிச்சுற்றில் சஜன் பிரகாஷ், இரண்டு நிமிடம், 0.78 வினாடியில் வந்து இரண்டாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் திர்தேங்க் பெகு (2:01.69) மூன்றாவது இடம் பெற்றார். சஜன் பிரகாஷ், திர்தேங்க் பெகு என இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.
அடுத்து நடந்த பைனலில், சஜன் பிரகாஷ், ஒரு நிமிடம், 57.09 வினாடியில் கடந்து, இரண்டாவதுஇடம் பெற, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சீன தைபேவின் குவான் ஹங் (1:56.18) முதலிடம், இந்தியாவின் திர்தேங்க் பெகு (2:00.96) 3வது இடம் பெற்றனர்.
காமன்வெல்த் தகுதி
காமன்வெல்த், 200 மீ., பட்டர்பிளை' பிரிவில் பங்கேற்க, 1:57.12 வினாடியில் பந்தய துாரத்தை கடக்க வேண்டும். இதையடுத்து சஜன் பிரகாஷ் (1:57.09) காமன்வெல்த் விளையாட்டில் (கிளாஸ்கோ, ஜூலை 23-ஆக. 2) பங்கேற்க தகுதி பெற்றார்.

Advertisement