ஓடும் லாரியில் இருந்து தப்பிய நாய்க்கூட்டம்; 17 கி.மீ., தூரம் பயணித்து வீடு திரும்பிய புத்திசாலித்தனம்!
நமது சிறப்பு நிருபர்
ஓடும் லாரியிலிருந்து தப்பித்த ஏழு நாய்கள் தங்கள் உரிமையாளர்களிடம் திரும்ப வந்து இணைவதற்காக, சீனாவில் 17 கி.மீ., தூரம் ஒன்றாக பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
சீனாவின் ஜிலின் மாகாணத்தின் சாங்சுன் நகரில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் ஓடும் லாரியிலிருந்து தப்பித்த ஏழு வெவ்வேறு இனங்களை சார்ந்த நாய்கள் கூட்டமாக நடந்து செல்லும் வீடியோ பேசும் பொருளாகியது. நாய் இறைச்சிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் திருடர்கள் நாயை கடத்தி ஒரு லாரியில் அடைத்து கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான் ஏழு நாய்களும் லாரியில் இருந்து தப்பித்துள்ளன.
இரண்டு நாட்களில் 17 கி.மீ தூரம் பயணித்த அந்த நாய்கள் மீண்டும் தங்கள் உரிமையாளர்களிடம் வந்து சேர்ந்துள்ளன. சாலையில் வரும்போது அந்த நாய்களை
கோர்கி (Corgi) நாய் வழி நடத்தியது, வீடியோக்களின் மூலம் தெரியவந்துள்ளது. வரும் வழியில் காயமடைந்த ஜெர்மன் ஷெப்பர்டைப் பாதுகாப்பாக நாய்கள் சேர்ந்து நடத்தி கொண்டு வந்த அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
இந்த நாய்கள் குழுவில் காயம் அடைந்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட், ஒரு கோர்கி, கோல்டன் ரெட்ரீவர்ஸ், லாப்ரடார்ஸ் மற்றும் பெக்கினீஸ் நாய்கள் ஆகியவை இருந்தன. இந்த சம்பவம், ஆபத்து நேரத்தில் விலங்குகள் தங்களுக்குள் பேணும் ஒற்றுமை மற்றும் புத்திசாலித்தனத்திற்குச் சிறந்த உதாரணமாக அமைந்திருந்தது.
இந்த நாய்கள் கூட்டத்தை பார்த்த சமூக வலைதள பயனர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: அவை ஆபத்தில் சிக்கிய சிறு சகோதரர்கள் கூட்டத்தை போல ஒற்றுமையாக சாலையில் வலம் வந்தன. நான் அந்த நாய்களுக்கு பலமுறை உதவ முயன்றேன். அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல முயன்றேன். ஆனால் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு ஒற்றுமையாக சாலைகளில் புத்திசாலிதனமாக நாய்கள் ஒற்றுமையாக செயல்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
-நான் அந்த நாய்களுக்கு உதவ முயன்றேன் சற்றே கவனித்தால் போதும், இந்த உலகின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் மனிதனே என்று புரியும். கடவுள் எந்த உயிரினத்தையும் சுய புத்திசாலித்தனம் இன்றி படைக்கவில்லை. ஓரறிவு ஈரறிவு என்பதெல்லாம் பொய். அனைத்தும் சமமாய் எல்லையற்ற அறிவுடன் படைக்கப்பட்டவையே. மனித படைப்பு இல்லாவிட்டாலும் அவற்றால் வாழ்ந்து கொள்ள முடியும். உண்மையில் பூமியின் பிரச்சினையே மனிதன் தான். மனிதன் பிற உயிர்களுக்கு நன்மை செய்கின்றேன் என்று செயல்படும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு மோசமான எதிர் விளைவு ஏற்படுத்துகிறான். விலங்குகளுக்கு உணவிடுதலும் நீர் வைத்தலும் கூட அப்படியே. தன்னை ஒரு கருணாமூர்த்தி என்று மனதில் கற்பனை செய்து கொள்கின்றான். பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள அவன் முயலும் ஒவ்வொரு முயற்சியும் மற்றொரு பிரச்சினையை உண்டாக்குகின்றது.
அடுத்தமுறை சீனாவில் ஆட்சி அமைத்துவிடும் போலயே..
7+1=8, 17 என்ற எண்ணின் கூட்டு தொகை 8 என்ன இன்று 8 பற்றியே செய்திகள் வருகிறது. எட்டு எட்டா மனுசன் வாழ்வை பிரிசிக்கோ என ஒரு ரஜினி படத்தில் வரும் பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது.
ரஜனி சொன்னது 8 க்கு உள்ளதான் வாழ்க்கை இருக்கு என்று, ஆனால் பாட்டு வைரமுத்து ELUTHIKODUTHTHATHU.
விடியல் கூட்டணி மாதிரி இருக்கே
அந்த ஒற்றுமை உங்க கட்சியில் இல்லையே
இத்தகைய உள்ளத்தைத் தொடும் கட்டுரையை வெளியிட்டதற்கும், இறைவனின் படைப்புகள் அனைத்தின் மீதும் எப்போதும் கருணை காட்டுவதற்கும் தினமலருக்கு நன்றி.
மனித இனத்தின் கொடூரச் செயல்கள் வரம்புகளை மீறிச் செல்கின்றன. மேலும் பல போர்கள், பெருந்தொற்றுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் வடிவில் கடவுளின் தலையீட்டையும் தண்டனையையும் எதிர்பார்க்கலாம். தற்போதைய உலகளாவிய நெருக்கடியைக் கவனிக்கும்போது, கடவுள் மனித இனத்தைத் தண்டிக்க ஏற்கனவே தொடங்கிவிட்டார் என்று தோன்றுகிறது.
மனிதர்கள் பாவம் .ஒருவருக்குஒருவர் எப்படி குண்டு வைத்துக் கொல்வது என்று மடத்தனமாக யோசிக்கும் மடையர்கள் மனித இனம் தான் .விலங்குகள் மூலம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் .
நல்ல வேளை ..