லாட்டரி அதிபரின் மகனுக்கு 600 கோடி ரூபாய் சொத்து
நமது நிருபர்
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தாக்கல் செய்த தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.600 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
@1brபுதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. தேஜ கூட்டணியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும், லட்சிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் காமராஜ் நகரில் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தானும் தனது மனைவி சிந்து ஸ்ரீ சார்லஸும் ரூ.340 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.270 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரமாணப் பத்திரத்தின்படி, ரூ.44 கோடி மதிப்புள்ள வைர நகைகளையும், ரூ.38 கோடி மதிப்புள்ள ஆடம்பரக் கைக்கடிகாரங்களையும், ரூ.26 கோடி மதிப்புள்ள 17.5 கிலோ தங்க நகைகளையும், ரூ.3.8 கோடி மதிப்புள்ள 135 கிலோ வெள்ளிப் பொருட்களையும் வைத்துள்ளார். அவரது மனைவி 3.6 கிலோ எடையுள்ள ரூ.5.35 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும், ரூ.2.1 கோடி மதிப்புள்ள வைர நகைகளையும், ரூ.1.68 கோடி மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் நகைகளையும், ரூ.1.14 கோடி மதிப்புள்ள ஆடம்பரக் கைக்கடிகாரங்களையும் வைத்துள்ளார்.
சார்லஸ் மார்ட்டின் கடந்த நிதியாண்டில் ரூ.59.37 கோடி வருமானம் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு வங்கிகளில் ரூ.200 கோடிக்கும் அதிகமான வைப்புத் தொகைகளையும், தொழிலில் பார்ட்னர்ஷிப் அடிப்படையில் ரூ.14.28 கோடி முதலீடுகளையும் வைத்துள்ளேன். உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் ரூ.210 கோடி மதிப்பில் கடன்கள் இருக்கிறது. தனக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய வருவாயைக் கொண்டு சொத்துக்களை வாங்கியதாகவும், சட்டவிரோத நிதியை நிதிநிலை அறிக்கைகளில் 'பிணையற்ற கடன்களாக' (Unsecured loans) தவறாகச் சித்தரித்ததாகவும் குற்றம் சாட்டி, அமலாக்கத்துறை அவர் மீது பணமோசடி வழக்கைப் பதிவு செய்துள்ளது.
நிதி முறைகேடுகள் தொடர்பான ஒரு வழக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுதவிர, லாட்டரி செயல்பாடுகள் மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள் தொடர்பாக மூன்று குற்றவியல் வழக்குகள் மேற்கு வங்க மாநிலத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மார்டின் தாயார் லீமா ரோஸ் வரும் தேர்தலில் திருச்சி மாவட்டம் லால்குடியில் அமைச்சர் நேருவை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது மைத்துனரான ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
வாசகர் கருத்து (12)
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
25 மார்,2026 - 13:56 Report Abuse
ரயில்வே துறையில் முதல் தனியார் 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
25 மார்,2026 - 12:43 Report Abuse
இவ்வளவு ஏழையா இருந்தும், மக்களுக்கு சேவை செய்ய குடும்பமே துடிக்குது. வாழ்த்துக்கள் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
25 மார்,2026 - 11:38 Report Abuse
MLA வாகி குற்றமெல்லாம் போயி ஞானஸ்னானம் வாங்கி விடுவான் போல. அரசியல் தரம் இப்போது மிக மோசமான குற்றவாளிகளின் கையில். 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
25 மார்,2026 - 11:31 Report Abuse
இவனை கூட்டணியில் வைத்த கட்சிகளுக்கு எனது கண்டனம் 0
0
Reply
chidhambaram - chennai,இந்தியா
25 மார்,2026 - 10:25 Report Abuse
நம்புங்க பெரு மக்களே , இவர் மக்களுக்கு சேவை செய்யத்தான் வேட்பாளராக நிற்கிறார் மத்தபடி சட்ட பாதுகாப்புக்காக இல்லை 0
0
Reply
Prakash - tamilnadu,இந்தியா
25 மார்,2026 - 10:09 Report Abuse
ஒட்டு மொத்த குடும்பமே ஏமாற்றுக் குடும்பம். திருட்டுப்பிண்னணி உள்ளக் குடும்பம். பல கட்சிகளில் உள்ளனர். இவர்கள் மேல் தேர்தலில் போட்டியிட வாழ் நாள் தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு பயமா என்ன? எல்லாம் தெரிந்த பின்பும் செவிடன் போல தேர்தல் ஆணையம் இருக்கின்றது. இவர்கள் குடும்பதினற்க்கு ஓட்டு போடாமல் டெபாசிட் கூட கிடைக்க விடாமல் பொது மக்கள் தான் செய்ய வேண்டும் 0
0
சித்தநாத பூபதி, மேட்டமலை - `Ajman,இந்தியா
25 மார்,2026 - 10:53Report Abuse
அவர்களைக் கூட்டணியில் வைத்திருக்கும் பா.ஜ.க ? 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
25 மார்,2026 - 10:06 Report Abuse
நான் வாழ்க்கையில் லாட்டரி வாங்கும் பலரைப் பார்த்துள்ளேன். ஆனால் லாட்டரிப் பரிசினால் கோடீஸ்வரர் ஆன யாரையும் பார்த்ததில்லை. லாட்டரி அதிபர்கள்தான் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள்.. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
25 மார்,2026 - 09:51 Report Abuse
எல்லாப் பக்கமும் துண்டு போட்டு வைத்துக் கொள்வது பிழைப்புக்கு நல்லது. இவங்க குடும்பக் கம்பெனி திமுக வுக்கு 550 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் கொடுத்தது. 0
0
Reply
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா
25 மார்,2026 - 09:45 Report Abuse
பெரிய அரசியல் குடும்பம் போல. ஏழை மக்களின் வயிற்றில் அடித்து லாட்டரியில் சம்பாதித்து அரசியலில் முதலீடு செய்து மீண்டும் பெரிய கொள்ளைக்கு தயாராகுகின்றார். என்ன செய்வது? இதுதான் நமது மக்களின் லட்சணம். 0
0
Reply
BALAJI - Coimbatore,இந்தியா
25 மார்,2026 - 09:23 Report Abuse
இவர் பாஜகவின் பினாமி 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள்.. ஏமாற்றம்! உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா?: சீமானின் ஆவேச கேள்வியால் மக்கள் அதிர்ச்சி!
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை மின்இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
-
விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக மணவெளி பா.ஜ., வேட்பாளர் செல்வம் உறுதி
-
காங்., வேட்பாளர் வைத்தியநாதன் லாஸ்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு
Advertisement
Advertisement