விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக மணவெளி பா.ஜ., வேட்பாளர் செல்வம் உறுதி

புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியின், மணவெளி தொகுதி பா.ஜ., வேட்பாளர் சபாநாயகர் செல்வம் கலைஞர் நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

ஓட்டு சேகரிப்பின் போது, அவர், நான் தொகுதியில், தரமான சாலை, மற்றும் வடிகால் வசதி, மின்மாற்றி அமைக்கப்பட்டு, மின் அழுத்தம் சரி செய்யப்பட்டுள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருந்தால் தான் புதுச்சேரி வளர்ச்சி காணும். உயர்த்தி வழங்கப்பட்டுள்ள முதியோர் மற்றும் விதவைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை தொடர்ந்து தடையின்றி வழங்கிடவும், குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதம் ரூ. 2,500 தொடர்ந்து கிடைத்திடவும், மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைய வேண்டும் என, மக்களிடம் எடுத்து கூறி ஓட்டு சேகரித்தார்.

தொகுதியில் தான் செய்த வளர்ச்சி பணிகள் அடங்கிய சாதனை மலரை பொதுமக்களிடம் வழங்கினார்.

மணவெளி ஓடைவெளி மற்றும் சின்ன வீராம்பட்டினம் பகுதி இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி சின்ன வீராம்பட்டினம் செல்லும் வழியில் உள்ள இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement