இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா?: சீமானின் ஆவேச கேள்வியால் மக்கள் அதிர்ச்சி!
திருக்கோவிலுார்: தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை விமர்சித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். திருக்கோவிலுார் தொகுதியில் நேற்று அவர் பேசியதாவது:
மானத்தை விட்டால், தமிழன் உயிரை விட்டுருவான்னு வாழ்ந்து வந்தோம். இன்று, அரைப்படி அரிசிக்கும், அரை கிலோ வெல்லத்துக்கும், ஒரு முழ கரும்புக்கும் மானத்தை விட்டு நிற்பது கேவலமா இல்லையா? நீ வேலை செய்யல, உழைக்கல, வெம்பாடு படல; கேடு கெட்டவங்க கிட்ட நாட்டை கொடுத்துவிட்டு இருக்கிற.
'பிரிஜ்'ல உளுந்து, அரிசி, பருப்பு வைக்கணும். அதை தரும் விவசாயிய கடன்காரன் ஆக்கிவிட்டு பிரிஜ் தாரேன், மிக்ஸி தாரேன், 'டிவி' தாரேன்னு சொல்றாங்க. நீ மானமுள்ள தமிழன் தானே? மிக்ஸி கொடுத்தான்னு பெருமையா வாங்கிட்ட, டிவி கொடுத்தான்னு வாங்கிட்ட, சேலை கொடுத்தான்னு வாங்கிட்ட, இலவசமா திருமணமும் பண்ணி வச்சிட்டான்.
எல்லாத்தையும் வாங்கிட்டு பெருமையா ஓட்டு போட்டியே, இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா? இதை சொல்லும் போது எவ்வளவு வலிக்குது.
இலவசத்தை வாங்குவது எவ்வளவு மானங்கெட்ட செயல்னு தெரியுதா, தெரியலையா? எனக்கு ஓட்டு போடு, போடாம போ. ஆனா, இந்த இலவசங்களுக்கு காசு எங்கிருந்து வருதுன்னு மட்டும் இலவசங்கள அள்ளி விடறவன்கிட்ட கேளு.
இவ்வாறு சீமான் பேசினார்.
முன்னதாக, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுாரில் பிரசாரம் மேற்கொண்ட சீமான், ''நாட்டில் ஒரு கட்சி கூட, இயற்கை வளங்களான நீர், காற்று, மரம், மலை ஆகியவற்றின் நிலை குறித்து பேசுவதில்லை. அ.தி.மு.க.,- - தி.மு.க., ஆகிய இரண்டும், காயலான் கடைக்கு போக வேண்டிய பழுதான கட்சிகள்,'' என பேசினார்.
இதுபோல, நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் சீமான் பேசுகையில், ''இந்த தேர்தலானது, தீய திராவிடர்களுக்கும், துாய தமிழர்களுக்குமான அரசியல் போர். இன்னும் ஒரு முறை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஆந்திராவின் ஒரு மாவட்டமாக திருவண்ணாமலை மாறிவிடும்,'' என்றார்.
@block_B@
திருக்கோவிலுாரில் சீமான் பேசியபோது, கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. ஆம்புலன்ஸ் சென்றபின் பேசிய சீமான், ''இந்த ஆம்புலன்சுக்குள் நோயாளி யாரும் இருப்பது போல் தெரியலியே? தேர்தல் வந்தால், ஆம்புலன்ஸ் அடிக்கடி போகும்; அதில், பொணம் போறதுக்கு பதிலா பணம் போகும். இது ஒரு நுட்பமான திருட்டு; ரொம்ப டெக்னிக்கலா யோசிப்பாங்க, 60 ஆண்டுகளா இதுலயே பழகிட்டாங்க,'' என்றார்.block_B
சீமான் கேட்டது சரியான கேள்விதான்
சைமன் பிச்சை எடுப்பாரு.ஆனா அந்த பணம் எப்படி வந்ததுன்னு கேக்க மாட்டாரு.
சீமானின் பெண்களை இழிவு படுத்தும் இந்த பேச்சு பச்சை பொறுக்கித்தனம். திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் மொத்தமாக அதிமுக பக்கம் சென்றுவிடாமல் லைட்டாக டெமேஜ் செய்து திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த கட்டுமர கம்பெனி பைனான்ஸில் நடத்தப்படும் ஒரு கமிஷன் மண்டி நாம் தமிழர் கட்சி. வழக்கம் போல் இப்போதும் அந்த கட்சியில் நின்று எவனும் சட்டமன்ற உறுப்பினர் ஆவப்போவதில்லை. ஆனால் சீமான் அண்ணாச்சி ஹாப்பி அண்ணாச்சி. அவருக்கு வரவேண்டியது பக்கவா வந்து இறங்கிடும்.
இலவச பிச்சை எடுக்கும் தமிழனுக்கு இது தேவைதான். இன்னும் எவ்வளவு கேவலமாக பேசினாலும் ஓசிக்கு ஓட்டை விற்கும் ஜென்மங்கள்
பிரமாதம் சீமான். தேர்தலில் எப்படியோ நீங்கள் லச்சக்கணக்கான மக்களை ஜெயித்து விட்டீர்கள்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுப்பவர்களை விட லஞ்சம் வாங்குபவர்களே குற்றவாளிகள் என்ற அடிப்படையில், ஓட்டுக்கு பணம் தருபவர்களைவிட பணம் பெறுபவர்களே குற்றவாளிகள்
நாகரிகம் கருதி நாம் சொல்ல முடியாததை, இப்படி போட்டு உடைத்துவிட்டாரே. வார்த்தையில் குற்றமிருந்தாலும், பொருள் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.
பாஜக இப்படி பேசியிருந்தா பொங்கியிருப்போம் பேசியது எங்க அண்ணண் அதனால் வெட்கம் மானம் சூடு சொரனை வராது? இதுவே பாஜக? பேசியிருந்தால் பல கட்ட போராட்டம் நடத்தி முடித்தியிருப்போம்? நாங்க தமிழர்கள்?
இலவசம் and ஓட்டுக்காக பிச்சை எடுக்கும் கேவலமான தமிழக மக்களுக்கு இந்த கேள்வியை கேட்கலாம்.
கொச்சை ஆனாலும் அவர் கேட்டது சரிதான்.மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு