ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம்
புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நம் நாடு ஒப்பந்தம் செய்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதி மூடப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
எனவே, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிற வழிகளில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக, அடுத்த மாத தேவைக்கு ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுஉள்ளது. இது பிப்ரவரியில் கொள்முதல் செய்ததை விட அதிகம்.
'ப்ளூம்பெர்க்' அறிக்கையின்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் வெனிசுலாவிலிருந்து 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த 2020ல் இறக்குமதி செய்த அளவை விட மிக அதிகம்.
கச்சா எண்ணெய் இறக்கு மதிக்கு மேற்காசியாவை மட்டும் நம்பி இருக்காமல், ரஷ்யா, வெனிசுலா என மாற்று வழிகளில் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
ஸ்டாலின் இதற்கும் ஸ்டிக்கர் ஒட்ட ஆசைப்படுவார். தனது அறிக்கையின் அழுத்தத்தால் தான் இப்படி நடந்துள்ளது என்பார். சொந்த மாநிலத்தில் கஞ்சாவை கட்டுப்படுத்த இயலாத ஸ்டாலின் மத்திய அரசுக்கு அறிவுரையோடு அக்கறையாக அறிக்கை விடுவார். ஆனால் எதோ குரைக்கும் சப்தம் என்று கூட கருதாமல், மக்களுக்கான சேவையில் தொடர்ந்து உலகிற்க்கே முன்னோடியாக செயல்பட இதுவே சிறந்த உதாரணம்.