சுங்க வரியை இனி யு.பி.ஐ.,யிலும் செலுத்தலாம்

புதுடில்லி: சுங்கவரியை இனி யு.பி.ஐ., டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலுத்தலாம் என்று மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுவரை குறிப்பிட்ட வங்கிகள் வாயிலாக என்.இ.எப்.டி.,(நெப்ட்), ஆர்.டி.ஜி.எஸ்., வசதிகளை பயன்படுத்தி மட்டுமே 'ஐஸ்கேட்' எனும் சுங்க வரி இணையதளத்தில் வரி செலுத்தும் வசதி இருந்தது.

பணம் செலுத்துவதை விரைவுபடுத்தவும், எளிமைப்படுத்தவும் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, யு.பி.ஐ., வாயிலாகவும் வரி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement